மோதி பதவியேற்பு! மம்தா புறக்கணிப்பு!

Published:

mamta banarjee - 2026

நாளை பிரதமராக மீண்டும் நரேந்திர மோதி பதவியேற்க உள்ள நிலையில், மோதி பதவியேற்பில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

முன்னதாக, பிரதமராக மோதி பதவி ஏற்க வுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மம்தா பானர்ஜிக்கு அழைப்பு அனுப்பப் பட்டது. அந்த அழைப்பை ஏற்று தாமும் பங்கேற்கவுள்ளதாகக் கூறியிருந்தார் மம்தா பானர்ஜி.

இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், இது ஒரு சம்பிரதாய நிகழ்ச்சி என்பதால், தாம் மோதி பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறியிருந்தார். அதை ஒட்டியே மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், மோதி பதவியேற்பு விழாவை அரசியல் ஆதாயத்திற்காக பயன் படுத்துவதாக தெரிகிறது என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.  மேலும், மேற்கு வங்க கலவரங்கள் தமது கட்சியினரால் நிகழ்த்தப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டி வருவதற்கும் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

முன்னதாக, திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜக.,வில் சேர்ந்தனர். மேலும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரால் நிகழ்த்தப்பட்ட தேர்தல் கால வன்முறைகளில் பாஜக., நிர்வாகிகள் பலர் கொல்லப் பட்டனர். அவர்களின் தியாகத்தை மதிக்கும் வகையில், கொல்லப் பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சிலரை மோதியின் பதவி ஏற்பில் பங்கு கொள்ளச் செய்துள்ளது பாஜக., தலைமை.

இது தமது கௌரவத்துக்கு இழுக்கு என்று கருதிய மம்தா பானர்ஜி, தாம் இந்தப் பதவி ஏற்பில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

இதனிடையே, நாளை நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

Related articles

Recent articles

spot_img