
லோக்சபாவில் பா.ஜ., தினம் தினம் கேள்வி கேட்டு திணரடிக்கவும், அவர்களை எதிர்க்கவும் காங்.,க்கு 52 எம்.பி.,க்கள் போதும் என காங்., தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
பார்லி.,க்கு காங்., கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக ராகுல் தலைமையில் காங்., பார்லி., உறுப்பினர்கள் குழு இன்று (ஜூன் 01) காலை கூடியது.
இதில் பார்லி., குழு தலைவராக சோனியா தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் கட்சி உறுப்பினர்களிடம் பேசிய ராகுல், நம்மிடம் 52 எம்.பி.,க்கள் உள்ளனர்.
இந்த 52 எம்.பி.,க்களும் பா.ஜ., எதிர்த்து ஒவ்வொரு இன்ச்சும் போராடுவார்கள் என நான் உறுதி அளிக்கிறேன்.
பா.ஜ.,வை ஒவ்வொரு நாளும் கேள்வி கேட்டு, எதிர்க்க நம்மிடம் உள்ள 52 எம்.பி.,க்கள் போதும்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்காகவும், அரசியலமைப்பிற்காகவும் காங்.,ன் ஒவ்வொரு உறுப்பினரும் போராட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அவர்கள் வெறுப்பையும், கோபத்தையும் நமக்கு எதிராக பயன்படுத்தி போராடுகிறார்கள்.
அதை நீங்கள் உற்சாகமாக ஏற்றுக் கொள்ளுங்கள். நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
நிதானமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டிய நேரம் இது இவ்வாறு அவர் கூறினார்.



