
மத்திய அரசின் திட்டங்களை தடுக்கும் நோக்கில் செயல்பட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு, மத்திய அமைச்சர் தேபாஸ்ரீ சவுத்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் தேபாஸ்ரீ சவுத்ரி. இவர் மேற்குவங்கத்தின் ராய்கஞ்ச் தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர்.
இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட தேபாஸ்ரீ செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், நான் மேற்குவங்க அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.
எனவே மத்திய அரசின் திட்டங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் மேற்குவங்க அரசு ஈடுபடக் கூடாது.
எங்கள் பணிக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டால் மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.



