
கமல், மும்மொழிக்கொள்கை, விருப்பமுள்ளவர்கள் கற்கலாம், திணிக்ககூடாது
எந்த மொழியையும் திணிக்க கூடாது. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு புதிய கல்விக்கொள்கையில், பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் கூறும்போது, எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்றும் விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்றார்.
தொடர்ந்து, தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படாதது குறித்து எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு வாய்ப்பே இல்லை என்பதைத்தான் பார்க்க முடிகிறது.
வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதாக தெரியவில்லை. தமிழக மக்கள் குரல் அந்த சபையில் ஒலிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை.
பிரதமர் மோடியின் ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதே ஒரு இந்தியனாக நான் ஆசைப்படுவது,” என்றார்.



