குருவாயூர் கோயிலில் பிரதமர் மோதி ஜூன் 8-ல் தரிசனத்துக்கு வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோதி கேரளத்தின் மிகவும் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வரும் ஜூன் 8ஆம் தேதி அன்று பிரார்த்தனை செய்கிறார். இரண்டாவது முறையாக பிரதமரான பிறகு மோதி தென்னிந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது
இது குறித்து கோவில் வட்டாரங்கள் தெரிவித்தபோது, கிருஷ்ணர் கோவிலில் குறைந்தது 45 நிமிடங்கள் பிரதமர் மோதி செலவிட உள்ளார். இதுகுறித்து பிரதமரின் அலுவலகம் அவர் வருகையை உறுதிப் படுத்தியுள்ளது. நாங்கள் பெற்ற தகவலின் படி அவர் மதிய நேரத்தில் உச்ச பூஜை வருவார் எனத் தெரிகிறது.. என்றார்கள்.
இதுகுறித்து குருவாயூர் தேவஸ்வம் போர்டு அதிகாரி மேலும் கூறியபோது, அவருடன் வேறு யாரையேனும் அமைச்சர்கள் வருகிறார்களா என்பது குறித்து தகவல் இல்லை என்று கூறியுள்ளார்
அதேநேரம் பாஜக இது குறித்து கூறியுள்ள போது பிரதமர் குருவாயூர் கோயிலில் பிரார்த்தனை மேற்கொள்கிறார். வேறு எவரும் உடன் வரவில்லை மேலும் கட்சியினரும் வருவதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்
ஜூன் எட்டாம் தேதி முற்பகல் 11:30க்கு பிரதமர் வருகிறார் என்றும் 4 மணி அளவில் அவர் தில்லி திரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் தென்னிந்தியாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற வைணவத் தலம். கேரளத்தின் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் ஏற்கனவே மோதி வழிபாடு செய்துள்ளார் அது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது! கடந்த ஜனவரி மாதம் அவர் திருவனந்தபுரம் கோயிலில் பிரார்த்தனை செய்தார்! இந்நிலையில் இப்போது குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு மோதி வர இருக்கிறார்!




