முன்னாள் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் முன்னாள் அமைச்சர் நாரா லோகேஷ் சமீபத்திய தேர்தலில் தோற்றுப் போனார்.
இந்த ஐந்து ஆண்டுகளும் அரசியலில் பெரிதாக செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லை ஆதலால் சினிமாவின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார்.
எப்படியும் மாமனார் பாலகிருஷ்ணா சினிமாத் துறையில் பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். சித்தப்பா மகன் நாரா ரோஹித் ஹீரோவாக உள்ளார்.
அதுமட்டுமின்றி அம்மா வழியில் நந்தமூரி குடும்பம் சினிமா உலகில் நல்ல பிடிப்பில் உள்ளார்கள்.
குண்டூர் மாவட்டம் மங்கள கிரி யில் போட்டியிட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடம் தோற்றுப்போனார் லோகேஷ். அரசியல் விவகாரங்களை தந்தை சந்திரபாபு நாயுடு பார்த்துக் கொள்கிறார் . கட்சிப் பொறுப்புகளில் சிலவற்றை மட்டும் பார்த்துக் கொண்டே சினிமாவில் அடியெடுத்து வைக்கப்போகிறார் என்ற செய்தி பரவலாகி வருகிறது.
ஆனால் நடிகராக அல்ல சினிமா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து வரிசையாக படங்களை எடுத்துத் தள்ள தீர்மானித்துள்ளார்.
இந்த ஐந்து ஆண்டுகளில் சினிமா வியாபாரத்தில் ஈடுபடப போகிறார். பொதுவாக எதிர்க்கட்சியில் இருக்கும் போது தலைவர்கள் பிசினஸில் ஈடுபடுவதுதான் வழக்கம். லோகேஷும் அதையே செய்யப்போவதாக செய்தி வைரலாகி வருகிறது.
36 வயதான லோகேஷ் சினிமாவில் இறங்குகிறார். அதேநேரம் இவர் மனைவி பிராஹ்மணி, சினிமா நடிகரும் என்டிஆரின் மகனுமான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் மகள் . பிராஹ்மணி ஹெரிடேஜி டயரி புட் கம்பெனியின் எக்சிகியூடிவ் டைரக்டர். இவர்களுக்கு நாரா தேவான்ஷ் என்ற மகன் இருக்கிறார்.




