கோவை மாவட்டம் வால்பாறையில் ஐந்தாவது படிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளார்.
வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் முதல் பிரிவில் தோட்டத்
தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சுடலை. இவர் நேற்றைய தினம் தனது மனைவியுடன் பணிக்கு சென்றுள்ளார்
அப்பொழுது அவரின் இளைய மகள் வீட்டில் இருந்ததாகவும் அக்கம் பக்கம் ஆளில்லாத நேரத்தில் அப்பகுதில் அருகே வசிக்கும் ரூபன் (வயது 49 த/பெ. கிருஷ்ணசாமி) என்பவர் தனியாக இருந்த அந்தப் பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாகவும் சிறுமியின் தந்தை சுடலைமணி வால்பாறை காவல் நிலைய ஆய்வார் முருகேசனிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின்அடிப்படையில் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட கருமலை ரூபன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.




