ஓமனில் இருந்து துபாய் திரும்பிக் கொண்டிருந்த போது ராஷிதியா என்ற இடத்தில் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானது! இதில் ராஜகோபாலன், தீபக் குமார், வாசுதேவ் உள்பட 8 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
துபையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். துபையில் இருந்து ஓமனுக்கு ரம்ஜான் விடுமுறையைக் கழிக்கச் சென்றவர்கள் அஙகிருந்து பேருந்தில் திரும்பியுள்ளனர். ஓமன் மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட அந்தப் பேருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபைக்குள் நுழைந்து ஷேக் முகமது பின் ஜாயீத் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது மெட்ரோ ரயில் நிலையம் அருகே பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது- அத்துடன் விளம்பர பலகைகளைத் தாங்கி நிற்கும் பெரிய தூணின் மீது படுவேகத்தில் மோதியது- இதனால் பேருந்து அப்படியே கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 10 பேர் இந்தியர்கள். இந்த 8 பேரில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று துபை அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.




