தெலங்கானா உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் நூற்றுக்கு நூறு சதவீத வெற்றி பெற்று ஆளும் டிஆர்எஸ் கட்சி உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர்.
தெலங்கானாவின் மொத்தம் 32 மாவட்டங்களில் நடந்த ஜில்லா பரிஷத் சேர்மன் தேர்தலில் 32 ஐயும் கை பற்றிக் கொண்டுள்ளது ரோஸ் கலர் கட்சியான ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி .
32 ஜில்லா பரிஷத் சேர்மன் தேர்தலில் 20 இடங்களில் பெண்கள் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சிறப்பான செய்தி. விகாரபாத் சேர்மனாக தேர்வான சுனிதா ரெட்டி ஹாட்ரிக் அடித்துள்ளார். கடந்த இரு முறையும் அவர் ஒன்றிணைந்த ரங்காரெட்டி ஜில்லா பரிஷத்தில் சேர்மனாக பணிபுரிந்தவர்.
மீதமுள்ள 19 பெண்களும் முதல்முறையாக சேர்மன் பதவியில் அமரப் போகிறார்கள். இவர்களுள் ரங்காரெட்டி ஜில்லா பரிஷத் சேர்மன் அனிதா ரெட்டி எம்பிபிஎஸ் படித்தவர். மகபூபாபாத் சேர்மன் “அங்கோது பிந்து” பிடெக் படித்தவர்.
பூபால பள்ளி சேர்மன் ஸ்ரீஹர்ஷிணி சாஃப்ட்வேர் இன்ஜினியர் . சித்திபேட்டை சேர்மன் ரோஜா சர்மா பள்ளி ஆசிரியர். நாராயணப்பேட்டை சேர்மன் வனஜா ஏழாம் வகுப்பு மட்டுமே படித்தவர்.
ஜில்லா பரிஷத் சேர்மனாக மிகச் சிறிய வயதில் தேர்வானவர் அங்கோது பிந்து. அவருக்கு 23 வயது. அனைவரிலும் பெரியவரான நிஜாமாபாத் ஜில்லா பரிஷத் சேர்மன் “தாதன்னகாரிவிட்டல்ராவ்”க்கு வயது 67.




