ரேணிகுண்டா விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோதிக்கு பாத நமஸ்காரம் செய்ய முயன்றார் ஜெகன்! தடுத்து நிறுத்தினார் மோதி.
ஞாயிறன்று மாலை திருப்பதி தரிசனத்திற்காக வந்த மோடி ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்புவில் இருந்து ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் பிரதமரை இரு தெலுங்கு மாநிலங்களின் ஆளுனர் ஈஎஸ்எல் நரசிம்மன், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி , மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியோடு ஆந்திர பிரதேச அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பிஜேபி தலைவர்கள் முதலியோர் வரவேற்றார்கள்.
ஆளுனர் ஈஎஸ்எல் நரசிம்மனை அடுத்து பிரதமருக்கு ரோஜா மலர் அளித்து வரவேற்ற ஜெகன், பிரதமரின் காலைத் தொட்டுக் கும்பிட முனைந்து குனிந்தார். ஆனால் அதனை மறுத்த பிரதமர் மோதி, ஜகனின் கையைப் பிடித்து நிறுத்தி விட்டார்.
ஜெகனின் தோளைத் தட்டிக் கொடுத்து ஏதோ கூறினார். ஆனால் அதைக் கேட்ட பிறகு மீண்டும் முதல்வர் ஜெகன், பிரதமர் மோதியின் காலை தொட்டு வணங்க முயன்றார்.
அப்போது மீண்டும் தடுத்து நிறுத்தினார் பிரதமர் மோதி. அவர் அப்போது என்ன சொன்னார் என்பது அங்கிருந்த எவருக்கும் தெரியவில்லை.
பிரதமரை வரவேற்றவர்களுள் அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி, ஒய்எஸ்ஆர் மாநிலங்களவை உறுப்பினர் விஜய சாயி ரெட்டி, எம்எல்ஏ பூமன கருணாகர ரெட்டி, சந்திரகிரி எம்எல்ஏ “செவிரெட்டி பாஸ்கர ரெட்டி ” முதலியோர் முக்கியமானவர்கள்.




