பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைந்தது. இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இந்த மாதத்தில், கடந்த 2 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக, நேற்று பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. பெட்ரோல் விலை (உள்ளூர் வரிகளை கணக்கிடாமல்) லிட்டருக்கு 80 காசு குறைக்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 30 காசு குறைக்கப்பட்டது. இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. விலைக் குறைப்புக்கு ஏற்ப உள்ளூர் வரிகளும் குறைந்ததால், நகரங்களுக்கு ஏற்ப விலை வேறுபட்டது. சென்னையில், பெட்ரோல் லிட்டர் ரூ.62.75 ல் இருந்து, 85 காசு குறைந்து ரூ.61.90 க்கு விற்கப்படுகிறது. தில்லியில் 80 காசு குறைந்து, ரூ.59.20 க்கும், கொல்கத்தாவில், 67 காசு குறைந்து, ரூ.66.81 க்கும், மும்பையில் 84 காசு குறைந்து, ரூ.61.69 க்கும் விற்பனை ஆனது. சென்னையில் ரூ.51.61 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.1.40 விலை குறைந்து, ரூ.50.21க்கும், தில்லியில், ரூ.1.30 குறைந்து ரூ.47.20 க்கும். கொல்கத்தாவில் ரூ.1.15 குறைந்து, ரூ.52.08க்கும், மும்பையில் ரூ.1.43 குறைந்து ரூ.54.26க்கும் விற்பனை ஆனது. “கடந்த முறை விலை குறைக்கப்பட்ட பின்னர், சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. இதனால் ஏற்பட்ட பலனை நுகர்வோருக்கு அளிக்க, இந்த விலை குறைப்பு அமல்படுத்தப்படுகிறது” என்று இந்திய எண்ணெய்க் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை குறைவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைந்தது. இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த மாதத்தில், கடந்த 2 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில், இரண்டாவது…
ஆந்திர அரசை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
கார் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 குழந்தைகள் உயிரிழப்பு!
ஏப்.24ல் சென்னையில் குண்டு வெடிக்கும்; ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 10 பேரையாவது கொல்வோம்: ஐ.எஸ். பயங்கரவாதிகள்
எனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும்: பவானி சிங்
சி.பி.எஸ்.இ. நெட் தகுதித் தேர்வு அறிவிப்பு
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான வி்ண்ணப்பம் விநியோகம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான வி்ண்ணப்பம் விநியோகம்
சென்னையில் இன்று பலத்த மழை: நாளையும் நீடிக்குமாம்!