
குங்கமம், தாலி அணிந்து வந்து நாடாளுமன்ற உறுப்பினராக பதிவியேற்றதற்காக கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட நுஸ்ரத்ஜஹான்,
தான் வாழ்வது மதச்சார்பற்ற நாட்டில், மத்ததின் பெயரால் நான் யாரையும் பிரித்து பார்ப்பதில்லை; எனவே விமர்சனங்களுக்கு நான் செவிசாய்ப்பதில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பஸிர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற பிரபல வங்காளத்து நடிகை நுஸ்ரத்ஜஹான்.
இவர் கடந்த 25ம் தேதி நாடாளுமன்றத்தில் எம்பி.யாக பொறுபேற்றுக் கொண்டார்.
இவர், பிரபல தொழிலதிபர் நிகில்ஜெயினை கடந்த 19-ம் தேதி துருக்கியில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து ஒருவாரத்திற்கு பின்னர் எம்பி யாக பதவியேற்றுக்கொண்டார் நுஸ்ரத்ஜஹான் அப்போது அவரது தோற்றம் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
நெற்றியில் குங்குமம், தாலி, கை நிறைய வளையல், மருதாணி என முழு புது மணப்பெண் கோலத்தில் காட்சி அளித்திருந்தார்.
உ.பியின் ஜமியா சேக் இயக்கத்தை சேர்ந்த முஃப்திஅசாத்ஆஸ்மி நுஸ்ரத் மீது கடும் விமர்சனம் வைத்தார்.
அவர் கூறுகையில் ‘நுஸ்ரத்ஜஹானின் திருமணத்தை நான் அங்கீகரிக்கவில்லை, நடிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்வார்கள்,
இஸ்லாமிய விதிப்படி இது பெரும் தவறு, இஸ்லாமியா்கள், இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவா்களைதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்,
தற்போது இஸ்லாம் மதத்தை சாராத ஒருவரை திருமணம் செய்து கொண்டு குங்குமமும், தாலியும் அணிந்து நாடாளுமன்றம் வந்துள்ளார்.
எனவே, இந்த பிரச்னையை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.
இது குறித்து நுஸ்ரத் கூறுகையில் ‘எனக்கு எதிராக இதுவரையில் ஃபாத்வா வழங்கப்பட்டதில்லை, என்னை விமா்சித்தார்கள்; ஆனால் அந்த விமா்சனங்களுக்கு நான் செவிசாய்த்ததில்லை,
முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் குடிமக்கள் நாம், இங்கு எல்லா கலாச்சாரங்களும், சடங்குகளும் மதிக்கப்பட வேண்டும்.
கடவுளின் பெயரில் நாம் ஏன் பிரிவினையை உண்டாக்க வேண்டும்? நான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவள்; மதச்சார்பற்ற நாட்டின் குடிமகள், கடவுளின் பெயரில் மக்களிடம் பிரிவினையை உண்டாக்க என்னை மதம் கற்பிக்கவில்லை,
வங்காள மொழியில் பேசுவதும், திருமணம் ஆனதால் நெற்றியில் குங்குமம், இட்டுக்கொள்வதும் என் விருப்பம், என் மனம் செல்லும் வழியில் நான் செல்கிறேன், இதில் யார் என்னை மதத்தின் பெயரில் விமர்சித்தாலும் அதை நான் கண்டுகொள்ள மாட்டேன்,
இது என் வாழ்க்கை; அதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்” என பதிலடி கொடுத்தள்ளார்.



