
ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒரு விழா என கொண்டாடி அசத்தி வருவார்கள் தமிழர்கள் அந்தவகையில் நடத்தப்பட்டு வருவதே மொய் விருந்து விழா.
நலிவடைந்த ஒருவரை காப்பாற்றும் பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு என்பதற்காக நடத்தபடும் பரம்பாிய விழா.
மொய் விருந்து விழாஎன்பது திருமண விழா, காதணி விழா,புதுமனை புகுவிழா போன்று தற்பொழுது தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் களைக்கட்டிக் கொண்டிருக்கும் ஒரு விழா “மொய் விருந்து விழா”. இ்வ்விழா தமிழ்நாட்டில் தஞ்சாவூா்,புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது.
வீட்டில் பொதுவாக நடைபெறும் இல்லற விழாக்கள் போன்று இல்லாமல் மொய் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்படும் விழா மொய் விருந்து விழாவாகும்.

இந்த மொய்விருந்து விழாவானது ஒரு தனி நபரால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
மேலும் இவ்விழா ஐந்து அல்லது பத்து நபா்களால் கூட்டாகவும் சோ்ந்து ஒரே விருந்து கொடுத்து பத்து நபா்களாலும் மொய் வாங்கப்படுகிறது.
இதனால் இவா்கள் கூடுதலான வட்டிக்கு பணம் வாங்கி மொய் செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் இந்த மொய் பற்றிய பாதிப்புகள் பல்வேறு செய்தி்த்தாள்களிலும் வந்துள்ளது.
இந்த மொய் விருந்து விழாவினால் மிகவும் பயன் பெறுபவா்கள் வசதி படைத்தவா்களே. இவா்கள் போட்ட மொய்யினை நான்காண்டுகள் கழித்து வட்டியும் முதலுமாக வசூலித்து மிகவும் பயன் பெறுகிறார்கள்
இந்த மொய் விருந்து விழாவினால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகுபவா்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்களே. ஏனென்றால் வசதியானவா்கள் சிலா் தமக்கு செய்த அதிக மொய்யினை செய்தும் அதற்குமேலும் கூடுதலாக மொய் செய்யும் நிலை ஏற்படுகிறது.
புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் கலாச்சாரம் சார்ந்த விழாவாக கருத்தப்படும் மொய் விருந்து விழா தொடங்கி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் அதன் சுற்றிய பகுதிகளில், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முதன் முதலில் தொடங்கப்பட்டதுதான் மொய்விருந்து விழாக்கள்,
அது மெல்ல மெல்ல வளா்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளிலும பரவி தற்போது இந்த மொய் விருந்து விழாக்கள் இந்த பகுதி மக்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாகவும் மாறிப்போய் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் தற்போது தொடங்கியுள்ள மொய் விருந்து விழா,
அதனை சுற்றிய பகுதிகளான அணவயல், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, சேந்தன்குடி, குளமங்கலம் என தொடர்ந்து அடுத்தடுத்த ஊர்களில் வரும் ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் வரை நடைபெறும்,
கடந்த ஆண்டு 500 கோடி வரையில் மொய் வணம் வசூல் ஆன நிலையில் இந்த ஆண்டு கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் அப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் வசூலாகும் மொய் தொகையின் விகிதாச்சாரம் குறையும் என்று விழா ஏற்பாட்டாளா்கள் கூறுகின்றனா்.
தற்போது கீரமங்கலம் பகுதியில் மொய் விருந்து களைகட்டத் தொடங்கி உள்ளது.
வீடுகள் தோறும் மொய் விருந்து அழைப்பிதழ்கள் குவிய தொடங்கி உள்ளன,
மேலும் மொய் விருந்து பேனர்கள் ஆங்காங்கே பளபளக்க தொடங்கி விட்டன, மொய் விருந்து விழாவிற்கு வருபவர்களை விழா நடத்துபவா்கள் அன்போடு மாலை அணிவித்து வரவேற்பதோடு அவர்களுக்கு ஆட்டுக் கறியுடன் கூடிய விருந்து பரிமாறப்படுகிறது.
பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் இந்த மொய் விருந்து விழாக்களால் பலரும் வேலைவாய்ப்புகள் கிடைப்பதாக அப்பகுதி வாசிகள் கூறுகின்றனா்.
மேலும் கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டு மொய் விருந்தில் எதிர்பார்த்த தொகை கிடைக்காவிட்டாலும் 250 கோடி முதல் 400 கோடி வரையில் இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மொய் விருந்து ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
மேலும் மொய் விருந்துக்குப் பெயர் போன புதுக்கோட்டை மாவட்டத்தில் கணிணி மூலம் பணம் வசூலிக்கும் முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிட தக்கது.
.



