என்.ஆர்.ஐ.,கள் இந்தியா வந்தவுடனேயே ஆதார் அட்டை வழங்கப்படும்! 180 நாள் காத்திருப்பு இனி இல்லை!

Published:

nirmalaseetharaman1 - 2026

வரும் 2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன் மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் மத்திய பெண் நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

பட்ஜெட் ஆவணங்களை ஒரு சூட்கேஸ் பெட்டியில் எடுத்துச் செல்லும் நிதி அமைச்சர்கள் மத்தியில், நிர்மலா சீதாராமன், ஒரு பெண்ணுக்கே உரிய கலை அழகு மிளிர, பெட்டிக்கு பை சொல்லிவிட்டு, இந்திய அரசுச் சின்னம் பொறிக்கப் பட்ட ஒரு பையை கையில் எடுத்துக் கொண்டு வந்தார்.

budget - 2026

#BudgetDay2019  17 – வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று முற்பகல் 11 மணி முதல் தாக்கல் செய்யப் பட்டு வருகிறது. மக்களவையில் தனது முதல் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

அவர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தவை…

அரசுத்துறை உட்பட அனைத்துத் துறையிலும் டிஜிட்டல் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளது.

இலவச எல்இடி பல்புகளால் ரூபாய் 18.341 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது

தேசத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

தனியார் மற்றும் அரசு பங்களிப்பு களுடன் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது

பெண்கள் பங்களிப்பு அதிகரித்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன

பெண்கள் பங்களிப்பு மட்டுமின்றி பெண்கள் தலைமையேற்கவும் தொடங்கிவிட்டனர்

ஒவ்வொரு சுயஉதவிக் குழுவில் ஒரு பெண்களுக்கு ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்

என்.ஆர்.ஐ-கள் இந்தியா வந்த உடனேயே ஆதார் அட்டை வழங்கப்படும் 180 நாள் காத்திருப்பு தேவையில்லை

உலகத் தரத்தில் 74 புதிய சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தப்படும்!

Related articles

Recent articles

spot_img