ஊதிய உயா்வு கேட்டு அரசு டாக்டா்கள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்..!

சற்றுமுன்
GH Dr - 2026

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்

இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்து வருகிறது.

அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி முதல் தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துமனைகளில் வேலை செய்து வரும் அரசு டாக்டா்கள் ஊதிய உயர்வு வழங்கிட கோரி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனா்.

இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது.

தங்கள் போராட்டம் குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

கடுமையான நீட் தேர்வை தாண்டி மருத்துவ துறையில் நுழைவது மிகப்பெரிய சவாலான விசயம்.

இந்தநிலையில் ஒரு பக்கம் டாக்டர்கள் பற்றாக்குறை என்று கூறுகிறார்கள்.

இன்னொரு பக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அரசு டாக்டர்களின் ஊதியம் மிகமிக குறைவாக வழங்கப்படுகிறது.

எனவே அரசு உடனடியாக அரசு ஆணை எண்.354-ஐ மறுஆய்வு செய்து முழுமையான ஊதியம் கிடைத்திட உத்தரவிடவேண்டும் .

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.