மோர்க் குழம்பு
தேவையானவை:
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 5,
தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
புளிப்பில்லாத கடைந்த மோர் – ஒரு கப்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு,
கடுகு – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
சுண்டைக்காய் – 15,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு, வெந்தயம் சேர்த்து வறுக்கவும். பிறகு, பச்சை மிளகாய், ஊற வைத்த பருப்பு சேர்த்து நன்கு வதக்கி… இஞ்சி, கொத்தமல்லி, தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் வைத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து லேசாக கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பிறகு அதனுடன் கடைந்த மோர் சேர்க்கவும். தேங்காய் எண்ணெயில் சுண்டைக்காயை சிவக்க வறுத்து மோர்க் கலவையில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி நன்கு கலந்து பரிமாறவும்.