
பரவை முனியம்மா நலமாக உள்ளார்! அவர் குறித்து வதந்தி எதுவும் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார் நடிகர் அபி சரவணன்.
உடல் நலக் குறைவால் மதுரையில் சிகிச்சை பெற்று வரும் பரவை முனியம்மா, நலமாக இருக்கிறார். அவர் குறித்து தவறான தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது! சற்று முன்னர் கூட அவரிடம் பேசினேன் என்று நடிகர் அபி சரவணன் கூறியுள்ளார்.
உடல் நலக் குறைவு காரணமாக, சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் பரவை முனியம்மாவை அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்து சமூகத் தளங்களில் வதந்தி பரப்பப் பட்டு வருவதாகக் கூறப் படுகிறது.
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மாள் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அவர் நலமுடன் உள்ளதாகவும், சிரித்து பேசிக் கொண்டிருப்பதாகவும், அவரது உறவினர்களும், மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்துள்ளது.



