ரஜினியை நேரில் சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து!

Published:

ponnar rajini - 2026

சென்னை : சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினிக்கு மத்திய அரசு அறிவித்துள்ள சிறப்பு விருதுக்காக அவரை நேரில் சென்று பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் #IconOf_Golden_Jubilee விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்களை நேரில் சந்தித்து எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவர் இன்னும் பல சாதனைகள் புரிய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன். – என்று குறிப்பிட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img