
இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருக்கும் மக்கள் டிவிட்டர் வலைதளத்தை தான் அதிகளவு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மக்கள் இனி டிவிட்டர் வலைதளமே வேண்டாம் என சொல்லி ஒரு அருமையான வலைதளத்திற்கு மாறிவருகின்றனர்.
மஸ்டொடோன் அந்த அருமையான வலைதளம் என்னவென்று பல்வேறு மக்களுக்கு கேள்வி எழும்? அந்த வலைதளத்தின் பெயர் மஸ்டொடோன், ஜெர்மனியைச் சேர்ந்த யூகன் ரோஹ்கோ என்ற 26வயது இளைஞரால் உருவாக்கப்பட்ட சமூகவலைதளம் தான் இந்த மஸ்டொடோன்.

இந்த மஸ்டொடோன் வலைதளம் தொடங்கப்பட்டு 2வருடங்கள் ஆகிறது, இருந்தபோதிலும் பெருமளவில் பயன்பாட்டாளர்களைப் பெறவில்லை. ஆனால் திடீரென அதிர்ஷ்டம் கதவைத் தட்டியதுபோல கடந்த சில நாட்களில் பல இந்திய வாடிக்கையாளர்களைப் பெறதொடங்கியிருக்கிறது இந்த மஸ்டொடோன்.
கடந்த சில நாள்களாக டிவிட்டரை சுற்றும் பெரும் சர்ச்சைகள் அனைவரும் தெரியும் என நினைக்கின்றோம். சமீபத்தில் சஞ்சய் ஹெக்டே என்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞரின் ட்விட்டர் அக்கவுன்ட் இடைநீக்கம் செய்யப்பட்டது.

பின்பு இவருடைய பதிவுகள் ரிப்போர்ட் செய்யப்பட்டதால் டிவிட்டர் இதை செய்திருக்கிறது. hateful or sensitive என்று அதை வரையறுத்தது ட்விட்டர். ஆனால், அவை எதுவும் அப்படியாக அமையவில்லை. அதனால் இவருக்கு ஆதரவாகவும் ட்விட்டரின் நடவடிக்கைக்கு எதிராகவும் பலரும் குரல் கொடுக்கத்தொடங்கினர்.
அதன்பின்பு அக்கவுன்ட் ஆக்டிவ்வானது ஆனால் அடுத்த நாளே மீண்டும் அவரின் அக்கவுன்ட்டை இடைநீக்கம் செய்தது டிவிட்டர் நிறுவனம்.

ப்ளூ டிக் கொடுக்கும் முறையால் பாரபட்சம் குறிப்பாக மக்களின் அக்கவுன்ட்களை வெரிஃபை செயய்து ப்ளூ டிக் கொடுக்கும் முறையால் பாரபட்சம் பார்க்கப்படுகிறது என்றும் பட்டியின மக்கள் சமூக செயற்பாட்டாளர்களின் பதிவுகள் நீக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் டிவிட்டர் மேல் எழுந்துள்ளது.
இதன்பின்பு சஞ்சய் ஹெக்டே டிவிட்டரில் கருத்து சுதந்திரம் முடக்கப்படுகிறது, எனவே மஸ்டொடோன் தளத்துக்கு மாறப்போகிறேன் என்று கூறினார்.
அப்படி பிரலமானது தான் இந்த மஸ்டொடோன். இது டிவிட்டர் போல் அல்லாமல் மிகவும் பாதுகாப்பாக செயல்படுகிறது என்றும் ஹெக்டே தெரிவித்தார். இதற்குபிறகு டிவிட்டரை பலரும் எதிர்த்து மஸ்டொடோன் தளத்துக்கு மாறிவருகின்றனர்.

இந்த மஸ்டொடோன்,அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே இருக்கும் கம்யூனிட்டிகளில் நேரடியாக சர்வர் மூலம் சேர வழிகள் அமைத்துக் கொடுக்கும். பின்பு இதில் நாமே வேண்டுமென்றால் ஒலு புதிய கம்யூனிட்டியை உருவாக்க முடியும். நமக்கென்று ஒரு username தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
டிவிட்டரைபோல ஒரு பதிவுக்கு இத்தனை வார்த்தைகள்தான் என்ற வரம்பு உண்டு. ஆனால், டிவிட்டரைப்போல அல்லாமல் (280 கேரக்டர்கள்) இதில் (மஸ்டொடோன்) லிமிட் 500 கேரக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மக்கள் மற்றும் பிரபலங்கள் டிவிட்டரில் யார் எதற்குவேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்பதால் தேவையற்ற வெறுப்பு மற்றும் அவதூறு பரப்பும் பதிவுகள் பலவும் பதிவாகிவந்தன.
ஆனால் மஸ்டொடோனில் நிலை அப்படி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் பல்வேறு மக்கள் மற்றும் பிரபலங்கள் இந்த தளத்தில் கணக்குகளை தொடங்கியுள்ளனர்.



