நடிகரின் புது வீட்டுக்காக இவ்ளோ செலவா?! அம்மாடியோவ்!

Published:

vijay devarakonda - 2026

நடிகர் விஜய் தேவரகொண்டா புது வீட்டிற்காக இவ்வளவு செலவழித்தாரா? அம்மாடீயோவ்…!!

‘சென்சேஷனல்’ ஹீரோ விஜய் தேவரகொண்டா சொந்த வீட்டிற்கு குடியேறினார். இதுவரை ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் இருந்த விஜய் தேவரகொண்டாவின் குடும்பம் புதிதாக ஹைதராபாத் பிலிம் நகரில் உள்ள புது வீட்டுக்கு குடி மாறியது.

பிலிம் நகரில் உள்ள சினிமா ஹீரோ ஸ்ரீகாந்த் வீட்டிற்கு அருகில் உள்ள இந்த வீட்டை விஜய் தேவரகொண்டா விலைக்கு வாங்கினார். ஞாயிறு அன்று பெற்றோர் மற்றும் சகோதரனுடன் சேர்ந்து கிருஹப் பிரவேசம் செய்தார் விஜய். ஆனால் இப்போது அந்த வீடு பற்றிய சர்ச்சை ஆரம்பமாகிவிட்டது.

இந்த புது சொந்த வீட்டிற்காக விஜய் தேவரகொண்டா ரூபாய் 20 கோடி செலவழித்து உள்ளதாக இண்டஸ்ட்ரி டாக். இந்த வீட்டை மிக விசாலமாகக் கட்டி உள்ளாராம் விஜய். தற்சமயம் விஜய் நல்ல ஃபார்மில் உள்ளார். கீதகோபாலம் சினிமாவால் விஜய் மார்க்கெட் உயர்ந்து உள்ளது.

vijay devarakonda1 - 2026

அதனால் தற்போது அவர் எட்டிலிருந்து பத்து கோடி வரை சம்பளம் வாங்குவதாக பேச்சு. அதுமட்டுமல்ல சொந்தமாக ‘ரவுடி ப்ராண்ட்’ என்ற பெயரில் துணி வியாபாரம் கூட செய்கிறார். அதுவும் நல்ல லாபத்தில் ஓடுகிறது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இவற்றோடு கூட வணிக விளம்பரங்கள் மூலமும் பேருமளவில் சம்பாதிக்கிறார். பல பிராண்டுகளுக்கு விஜய் பிராண்ட்- அம்பாசிடராக உள்ளார். அவற்றின் மூலமும் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது.

அது மட்டுமல்ல விஜய் தேவரகொண்டா சினிமா தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். முதல் படமாக ‘மீகு மாத்திரமே சேஸ்தானு’ தயாரித்தார். அதுவும் நல்ல லாபம் பெற்றுத் தந்தது.

தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு அவரின் பெற்றோர் பெண் தேடி வருகிறார்கள். விஜய்யை ஒரு குடும்பஸ்தன் ஆக்குவதற்கு முன்பு அவரை சொந்த வீடு வாங்கச் செய்தனர் பெற்றோர்.

“வீட்டை கட்டிப் பார்…! கல்யாணம் செய்து பார்!” என்கின்றனர் ரசிகர்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img