spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅதிர்ச்சி… அவமானம்… அசிங்கம்! திதி தேவஸ்தான இணையத்தில் இயேசு கிறிஸ்து பிரசாரம்! கொந்தளிக்கும் இந்துக்கள்!

அதிர்ச்சி… அவமானம்… அசிங்கம்! திதி தேவஸ்தான இணையத்தில் இயேசு கிறிஸ்து பிரசாரம்! கொந்தளிக்கும் இந்துக்கள்!

- Advertisement -
<strong> Jesus Christs name appeared on the Tirumala Tirupati Devasthanams website The name Shri Yesayya శ్రీయేసయ్య or Shri Jesus Christ appeared to have been inserted in an earlier version of the Tirumala Tirupati Devasthanams panchangam document <strong>

தற்போது TTD – திருமலை திருப்பதி தேவஸ்தானம் தங்கள் வெப்ஸைட் மூலம்..
????ஜீஸஸ் உங்களிடம் அன்பு செலுத்துகிறார்..
????ஜீஸஸ் உங்களை வழி நடத்துவார்..
????ஜீஸஸ் உங்களுக்காகவே மாண்டு போனார்..
என்றெல்லாம்.. அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்..!

ஹிந்துக்களின் புனிதத் தலமான திருமலை திருப்பதி தேவஸ்தானம் TTD இன் அதிகாரபூர்வ வலைத்தளமான ‘www.tirumala.org ’இன் இணைப்பில் கிறிஸ்துவ பிரார்த்தனைகள் வெளிவந்த பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2020ஆம் ஆண்டுக்கான தனது 12-மாதங்கள் கொண்ட 12 பக்க காலண்டரையும் நாட்குறிப்பையும் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் பின்னர் இந்த விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது.

திதி தேவஸ்தான காலெண்டரைப் பதிவிறக்க, ‘டி.டி.டி காலண்டர் 2020 பி.டி.எஃப்’ ஐத் தேடிய நெட்டிசன்கள் கூகுளில் பல இணைப்புகளைக் கண்டறிந்தனர். தேடலின் போது வந்த ஒரு இணைப்பு, தெலுங்கில் ‘ஸ்ரீ யேசய்யா’ என்று கூறி ஒரு வரி இருந்தது. ஸ்ரீ வெங்கடேசாய நமஹ. ஸ்ரீ விகாரி நாம ஸம்வத்சரே சித்தன்-த பஞ்சாப்தமு 2019-2020 என்று அதில் இருந்தது.

இது குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. இவ்வாறு வெளிவரத் தொடங்கியதும், டி.டி.டி வலைத்தளத்துக்கான இணைப்பு இடையில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மாலைக்குள் திதி தேவஸ்தான வலைத்தளப் பக்கம் புதுப்பிக்கப்பட்டது!

புதுப்பிக்கப் பட்ட அந்தப் பக்கத்தில், ‘ஸ்ரீ யேசய்யா’ விலக்கப்பட்டிருந்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஊழியம் பார்க்கும் கிறிஸ்துவ விசுவாச சபையினரின் முயற்சி, விழிப்புடன் இருந்து செயல்பட்ட திருமலை திருப்பதி பக்தர்களால் முறியடிக்கப் பட்டுள்ளது.

எனினும் இந்த வார்த்தைகள் திதி தேவஸ்தான வலைத்தளத்தில் எவ்வாறு தோன்றின என்று டிடிடி அதிகாரிகள் ஐடி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், டிடிடி.,யால் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ள டிசிஎஸ் நிறுவனத்தாருடன் விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இது ஒரு ஹேக்கிங் சம்பவமா இல்லையா என்பதை உறுதிப்படுத்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டது.

இந்த விவகாரத்தில் பதிலளித்த டி.டி.டி தலைமை விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரியுமான கோபிநாத் ஜெட்டி, “இந்த விஷயம் எங்கள் கவனத்திற்கு வந்த பிறகு, இணைப்பு இடைநிறுத்தப்பட்டு மாலைக்குள் புதுப்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நாங்கள் ஒரு விசாரணையைத் தொடங்கினோம், விரைவில் உண்மைகள் வெளிக் கொணரப் படும். ” என்றார்.

இதனிடையே பல ஹிந்துக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள், குறிப்பாக பாஜக ஆர்வலர்கள், டிடிடி நிர்வாகத்திற்கு எதிராக கடுமையான தாக்குதலை தொடங்கியுள்ளனர். குழுவில் பணிபுரியும் இந்து அல்லாத ஊழியர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

ராயலசீமா போராட்ட சமிதி ஒருங்கிணைப்பாளர் பி.நவீன் குமார் ரெட்டி இது குறித்து குறிப்பிடுகையில், முறையான தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை வேண்டுமென்றே சேதப்படுத்துவதைத் தடுப்பதிலும் டி.டி.டி நிர்வாகம் முற்றிலும் தோல்வியுற்றிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

“கடந்த காலத்தில்கூட, தேவஸ்தான வலைத்தளத்தில் இயேசு கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும் குறிக்கும் மூன்று பக்கங்கள்‘ மின் புத்தகங்கள் பிரிவின் கீழ் பதிவேற்றப்பட்ட புத்தகங்களில் காணப்பட்டன.

வேண்டுமென்றே, கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த முயற்சிக்கும் வேற்று மதங்களைச் சேர்ந்தவர்களின் செயல்களை இந்த ஒரு சம்பவம் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார் ஜெட்டி.

ஏற்கெனவே, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த பஸ்களின் டிக்கெட்டுகளில் இயேசு கிறிஸ்து குறித்த ஜபக்கூட்ட செய்திகள் அச்சிடப் பட்டன.

திருமலை திருப்பதி ஏழுமலைகளில் மூன்று மலைகளை கிறிஸ்துவ அமைப்புகளுக்கு தாரை வார்க்க முயன்ற ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, அதே திருமலை பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார்.

தற்போது, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக தலைவராக நியமிக்கப் பட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா சுப்பா ரெட்டி, ஒரு கிறிஸ்துவர் என்று அவரது நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஜெகன் மோகன் ரெட்டியும் கூட இந்துவாக இருந்து கிறிஸ்துவராக மதம் மாறிவிட்டதாகக் கூறப் பட்டது. அவரது தாய் கிறிஸ்துவ ஜபக் கூட்டத்தில் கலந்து கொண்டு, ஜெகனுக்காக பிரார்த்தனை செய்தார். அதே நேரம், ஜகன் மோகன் ரெட்டியோ தான் திருந்திவிட்டதாகவும், மீண்டும் தாய் மதம் திரும்பி விட்டதாகவும் கூறி, திருப்பதிக்கு பாத யாத்திரை வந்து பெருமளவு மக்களின் ஆதரவைப் பெற்றார். ஆனால் எல்லாம் நடிப்புதான் என்று அப்போதே ஹிந்து மத ஆர்வலர்கள் கூறினர்.

தொடர்ந்து திருப்பதியை கபளீகரம் செய்யும் கிறிஸ்துவ அஜண்டா வெளிப்படையாக பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகிறது.

இதையும் படியுங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe