
எழுதியவர்- ‘காவ்ய கண்ட’ வாசிஷ்ட கணபதி முனி.
- பத்ர தர மூர்திம் பத்ர தம கீர்திம் I
ருத்ர தனயம் தம் காயத மஹாந்தம் II - ஜ்யோதி ரிஹ சூக்ஷ்ம ஜ்வால மதி தீப்தம் I
பாதி குலகுண்டௌ யோகி மனு ஜாப்தம் II - தம் கணபதிம் யோ விஸ்மரதி லோகே I
சந்தத மபாக்யோ மஜ்ஜதி ஸ ஸோகே II - ஸீதனகஜாயாஸ்ஸூனுரதி ஹ்ருத்யாம் I
பூரி கருணோமே பூரயதி வித்யாம் II - வாரண முகோமே வாரயது கஷ்டம் I
சர்வமபி தேயாத் சர்வ ஸுத இஷ்டம் II - நிர்ஜித ஜராதிம் நிர்தலித ரோகம் I
தந்தி வதனோமே வர்தயது யோகம் II - ஹஸ்தி முக யாசே காடரஸ பக்த்யா I
ஆவிஸ விபோ மாம் திவ்ய நிஜ சக்த்யா II - தேஹி நிஜ தேஜ: கிங்கர ஜநாய I
ஈஸ்வர கணானாம் பாரத ஹிதாய II - சர்வதஜனோயம் வாஞ்சதி ந முக்திம் I
தேச குசலாய ப்ரார்தயதி சக்திம் II

பொருள்:-
- மங்களகரமான மூர்த்தியை, சிறந்த மங்களகரமான கீர்தியுள்ளவனை ருத்திரனின் தனயனான மகாத்மாவை கானம் செய்வோம்.
- மிகப் பிரகாசமாக உள்ள ஜோதி, சூட்சும ஜ்வாலையாக, யோகிகளுக்கு பிரியமாக குலகுண்டத்தில் (மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி)
ஒளிர்கிறது. - கணபதீ! இவ்வுலகில் உன்னை மறந்தவன் எப்போதும் பாக்கியமற்றவனாக சோகத்தில் மூழ்கி இருப்பான்.
- குளிர்ந்த மலையின் மகளுடைய (பார்வதி) புதல்வன் விஸ்தாரமான கருணையோடு இதயத்துக்குகந்த வித்யையை எனக்கு முழுவதுமாக அருளுவானாக!
- யானை முகத்தோன், சிவ புத்திரன் கஷ்டங்களை நீக்கி, இஷ்டங்களை அளிப்பானாக!
- வயோதிகத்தையும், மனோ வியாதிகளையும், உடல் உபாதைகளையும் விலக்கி, கஜமுகன் என் யோகத்தை வளர்ப்பானாக!
- ஓ! ஹஸ்தி முகத்தோனே! மிகுந்த ரஸ பக்தியோடு யாசிக்கிறேன். உன் திவ்ய சக்தியோடு என்னை ஆவேசிப்பாயாக!
- ஈஸ்வர கணத்தைச் சேர்ந்த உன் கிங்கரனுக்கு பாரத தேச நலனுக்காக உண்மையான தேஜஸை அருள்வாயாக!
- அனைத்தையும் அளிக்கும் சுவாமி நீ! நான் முக்தியை கேட்கவில்லை. தேச நலனுக்குத் தேவையான சக்தியை அருளும்படி பிரார்த்திக்கிறேன்.
- Source:- ருஷிபீடம் விசிஷ்ட சஞ்சிக, 2015.
- ராஜி ரகுநாதன், ஹைதராபாத்