பெட்ரோல் வாங்குனா அதுல.. பாதிக்கு மேல தண்ணீ? பொதுமக்கள் ஆவேசம்!

உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
petrolwithwater - 2026

எகிறிப் போயி விக்குற விலையில… பெட்ரோல வாங்கிட்டுப் போனா… அதுல தண்ணியக் கலந்து விக்கிறானுங்க… என்று ஆவேசப் படுகின்றனர் பொதுமக்கள்.

இது குறித்த ஒரு வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி யுள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப் என உலா வரும் அந்த வீடியோவில், ஒரு லிட்டரு பெட்ரோலு வாங்குனா… அதுல 300 மில்லி தான் பெட்ரோல் இருக்கு. மீதியெல்லாம் தண்ணி. இவங்க தண்ணிய கலந்து விக்குறானுங்க…. என்று சொல்லிக் கொண்டு பிளாஸ்டிக் கேன்களை வெளியில் காட்டிக் கொண்டு நிற்கிறார்கள் சிலர்.

ஒருவர், நல்லா எடு.. வாட்ஸ் அப்புல போட்டு விடு… என்று அங்கலாய்க்கிறார். தொடர்ந்து சிலர் பெட்ரோல் பங்கின் முன் நின்று கொண்டு பிளாஸ்டிக் கேன்களை காட்டுகின்றனர். அதில் பெட்ரோல் மஞ்சள் வண்ணத்தில் மேலே மிதக்கிறது.

வேலூர் நகராட்சி முன் உள்ள HP பெட்ரோல் பங்கில் பெட்ரோல் கேட்டாள் அதில் வந்தது தண்ணீர் அதிர்ச்சியில் பொதுமக்கள்…. என்று உலா வரும் அந்த வீடியோ பதிவு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.