பயனர்களை கடுப்பேற்றும் ஏர்டெல்!

தொழில்நுட்பம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் வணிகம்
airtel - 2026

ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை கடுப்பேற்றும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் ஆறு டாக் டைம் திட்டங்களை வழங்குகிறது.அவை ரூ.10, ரூ.20, ரூ.100, ரூ.500, ரூ.1000 மற்றும் ரூ.5,000 என்ற விலையில் கிடைக்கிறது.

இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவெனில், பயனர்கள் எந்த விலையில் டாக் டைம் ரீசார்ஜ் செய்தாலும், இதனோடு கட்டாயம் ஸ்மார்ட் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே டாக் டைம் ரீசார்ஜ் செயல்படுமாம்.

airtel 1 - 2026

அதாவது, நீங்க ரூ.5,000-க்கு ரீசார்ஜ் செய்தாலும் அல்ல ரூ.10-க்கு ரீசார்ஜ் செய்தாலும் கட்டாயம் ரூ.45 ஸ்மார்ட் ரீசார்ஜை (மினிமம்) செய்திருக்க வேண்டும். ரூ .45 ஸ்மார்ட் ரீசார்ஜ் தவிர, ரூ.49, ரூ.79 ஆகிய விலைகளிலும் ஸ்மார்ட் ரீசார்ஜ் கிடைக்கிறது.

ஸ்மார்ட் ரீசார்ஜ் எந்த விதமான டாக் டைம் நன்மையையும் தராது மாறாக இது 28 நாட்களுக்கு ரேட் கட்டர் மற்றும் சேவை செல்லுபடியாகும் சலுகைகளை மட்டுமே வழங்கும் ஒன்றாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.