8 நாட்களாக இறந்த குட்டி அருகே நிற்கும் தாய்! பாசப்பிணைப்பு!

சற்றுமுன்
elephants - 2026

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த வாரம் யானைக் கூட்டம் ஒன்று வந்துள்ளது. அப்போது அதிலிருந்த குட்டி யானை ஒன்று அங்கிருந்த சேற்றுக் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளது.

இதனால் அந்த நாள் முழுவதும் யானைக் கூட்டம் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்துள்ளது. அந்த யானைகள் வனத்துறையினரை விரட்டி அடித்ததால் அந்த குட்டி யானையின் சடலத்தை மீட்க முடியவில்லை.

மறுநாள் அங்கே மீண்டும் சென்று வனத்துறையினர் சென்று பார்த்துள்ளனர். அன்று மற்ற யானைகள் எல்லாம் அங்கிருந்து கலைந்து சென்று நிலையில், தாய் யானை மட்டும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்துள்ளது. மீண்டும் வனத்துறையினர் குட்டியின் உடலை மீட்க முயன்ற போது அந்த யானை அவர்களை விரட்டியுள்ளது.

elepahant 1 - 2026

காலை வேளையில் அந்த தாய் யானை சற்று தொலைவில் சென்று இலை, தழைகளைச் சாப்பிட்டு விட்டு மீண்டும் அங்கேயே வந்து நின்று கொள்கிறதாம்.

இதனால் கடந்த 8 நாட்களாக அந்த யானை எங்கும் செல்லாமல் தன் குட்டி இருந்த இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, வனத்துறையினர் மரங்களின் மீது ஏறி தாய் யானையின் நடமாட்டத்தைத் தொலை நோக்கு கருவி மூலம் சோதனை செய்து வருகின்றனர். தாய் யானையின் இந்த பாச போராட்டம் கேட்போரின் மனதை உருக்கச் செய்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.