தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 2900 கள உதவியாளர் (டிரெய்னி) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதறகான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 2900
பணியிடம்: தமிழ்நாடு
பணி: Field Assistant (Trainee)
காலியிடங்கள்: 2900
சம்பளம்: மாதம் ரூ.18,800 – 59,900
தகுதி:
எலக்ட்ரீசியன், எலக்ட்ரிக்கல், ஓயர்மேன் போன்ற ஏதாவதொரு பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மாநிலத்தின் உத்தியோகபூர்வ மொழியான தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
01.07.2029 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் 35க்குள்ளும், எம்பிசி, டிசி, பிசிஓ, பிசிஎம் பிரிவைச் சேர்ந்தவர்கள் 33க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
ஓசி, பிசிஓ, பிசிஎம், எம்பிசி மற்றும் டிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1000, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையைான விவரங்கள் அறிய https://www.tangedco.gov.in/linkpdf/note(19320)fieldhelper.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 28.04.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 24.03.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2020