December 6, 2025, 5:40 PM
29.4 C
Chennai

கோயில் நிதியை நலிவுற்றிருக்கும் பணியாளருக்கு வழங்க வேண்டும்!

hrnce office - 2025

இந்து கோயில்களின் உபரி நிதி ரூபாய் 10 கோடியை தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்கு பதிலாக திருகோயில் பணி செய்யக்கூடிய சிவாச்சாரியார்கள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், இசை கலைஞர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்… என்று, இந்து தமிழர் கட்சி கோரிக்கை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

அக்கட்சியின் நிறுவனர் தலைவர் ராம.ரவிக்குமார் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்…

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 10 கோடி பணம் கோவில்களின் உபரி நிதியிலிருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 10 கோடி வழங்க இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலர்அவர்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் திரு பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

முதுநிலை கோவில்களின் செயல் அலுவலர்கள் இணை ஆணையர்கள் உதவிஆணையர்கள் ஆகியோர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் ஊரடங்கு, தொழில் வருமானம் இன்றி தவிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவை முதல்வர் நிவாரண நிதியால் பூர்த்தி செய்யப்படுகிறது.

எனவே இன்று 24.04.2020 மாலைக்குள் தக்கார், அறங்காவலர் ஆகியோர் தீர்மானத்துடன் அறநிலையதுறைக்கு உரிய நிதியை அனுப்ப வேண்டும். பழனி, திருச்செந்தூர், மதுரை ,திருத்தணி, திருவேற்காடு, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் ,சமயபுரம், ராமேஸ்வரம், மயிலாப்பூர், கபாலீஸ்வரர், கோவில்கள்
“தலா 35 லட்சம் ரூபாய்” வழங்க வேண்டும்.

பண்ணாரி, அழகர் கோவில், மருதமலை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வடபழனி ஆண்டவர், மாங்காடு, சங்கரன் கோவில், சுவாமிமலை ,மதுரை பாண்டி முனீஸ்வரர், கோவில்கள்” தலா 25 லட்ச ரூபாய் “வழங்க வேண்டும்.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமிகோயில், திருவொற்றியூர் தியாகராஜர், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர், மேல்மலையனூர் அங்காளம்மன், கோவில்கள் உள்ளிட்டவை “தலா 15 லட்சம் ரூபாய்” வழங்க வேண்டும்!இந்த 47 கோவில்களின் உபரி நீதியான “ரூபாய் 10 கோடியை “முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று உத்தரவுபிறப்பிக்கப்
பட்டிருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறது. இந்து சமய அறநிலயத் துறைக்கு கோவில் மேம்பாட்டிற்காக திருக்கோவில் திருப்பணிக்காக மற்றும் திருக்கோயில் நலன் சார்ந்த எந்த ஒரு உதவிக்காகவும் தமிழக அரசினுடைய மற்ற துறைகளில் இருந்துஎந்தவிதமான நிதியும் வந்ததாகத் தெரியவில்லை. வந்திருந்தால் அதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தமிழகத்தில் எத்தனையோ திருக்கோயில்கள் சிதிலமடைந்து திருப்பணி செய்யப் படாமல், வழிபாடு இல்லாமல்இருந்துகொண்டிருக்கிறது.

அதையெல்லாம் இந்த திருக்கோயில் உபரி நிதியிலிருந்து திருப்பணி செய்ய முயற்சி செய்யலாமே! தமிழகத்தில் அனைத்து திருக்கோயில்களும் மூடப்பட்டு,பக்தர்கள்வழிபாடு செய்ய முடியாமல் ,இந்து சமய கோவில் திருவிழாக்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு இருக்கக்கூடிய கஷ்டமான சூழலில், திருக்கோயில் ஊழியர்களும் திருக்கோயில் பணி செய்யக்கூடிய அர்ச்சகர்களும், குருக்கள், சிவாச்சாரியார்கள் ஓதுவார்களும் மற்றும் பக்தர்களின் காணிக்கை பணத்தை நம்பி இருக்கக்கூடிய திருக்கோயில் வழிகாட்டிகளும்
மற்றும் அவர்கள் குடும்பத்தார் எல்லாம் வாழ்வாதாரத்திற்கு கஷ்டப் படும் சூழலில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேலே குறிப்பிட்ட கோவில்களின் உபரி நிதியில் இருந்து ரூபாய் “10 கோடி” எடுத்து முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கொடுக்க
வேண்டிய அவசியத்திற்கு பதிலாக, “மக்களுக்குத்தான்” போய் சேர வேண்டும் என்ற நோக்கம் சரி என சொன்னால், திருக்கோயில் பணிக்காக; திருக்கோயில் தொண்டுக்காக வாழக்கூடிய மேலே குறிப்பிட்ட திருக்கோவில் பணிசார்ந்த மக்களுக்கு அந்த நிதியை செலவு செய்யலாமே! அதுவும் சரியாக இருக்கும் தானே!

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எத்தனை மசூதிகளில் வருமானத்தை எத்தனை சர்ச்சுகளின் வருமானத்தை எடுத்து எவ்வளவு பணம் கொடுத்து இருக்கிறார்கள் என்கின்ற விபரத்தை இந்த தமிழ் சமுதாயம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளுக்கு சமபந்தி போஜனம் என்று “தெவச சோறு” போடும் நிகழ்வு. இந்து கோவில்களில் மட்டும்தான் நடக்கிறது. பிற மதத்தவர்களின் வழிபாட்டுத்தலங்களான மசூதிகளில் சர்ச்சுகளில் நடைபெறுவது கிடையாது; அனுமதிக்கவும் மாட்டார்கள்.

அதை விடுத்து விட்டு “கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல” இந்துக்கோயில் வருமானத்தை எடுத்து முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கொடுப்பது என்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.

இப்படி கொடுக்கக் கூடிய பணத்தில்தான் “இஸ்லாமிய மதத்தவர்களின் ரமலான் நோன்புக் கஞ்சி கொடுப்பதற்கு அரிசி வழங்கப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் இந்த முடிவுக்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனங்கள் பதிவு செய்கிறோம்.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கொடுப்பதற்கு பதிலாகஅந்த உபரி நிதியை திருக்கோயிலில் வேலை செய்யக் கூடிய மனிதர்களுக்கு இந்த ரூபாய் 10 கோடியை பிரித்துக் கொடுக்கலாம் என்ற வேண்டுகோளை இந்து சமய அறநிலையத்துறை செயலர் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆகியோருக்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் முன் வைக்கிறோம். தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்யும் என்று நம்புகிறோம்… என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories