spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தன்னிறைவு இந்தியா திட்டத்தின் 4ம் கட்ட அறிவிப்புகள்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தவை…!

தன்னிறைவு இந்தியா திட்டத்தின் 4ம் கட்ட அறிவிப்புகள்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தவை…!

- Advertisement -
nirmala seetharaman

பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமான, ஆத்மநிர்பர் பாரத் – தன்னிறைவு இந்தியா திட்டத்தில் 4வது கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியவை….

சுயசார்பு என்பது இந்தியாவை தனிமைபடுத்தி கொள்வதற்கான கொள்கை அல்ல. இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்மானமாக கொண்டது.

போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.சர்வதேச சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

இந்திய வான்பரப்பை விமான நிலையங்கள் பயன்படுத்துவதில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், விமான நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்.சீர்திருத்தங்கள் மூலம் விமானங்கள் இயக்குவதற்கான செலவை ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்திய வான்பரப்பை விமானங்கள் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

வான்பரப்பை தாராளமாக பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் விமானங்களுக்கு பயண நேரம், எரிபொருள் மிச்சமாகும். மேலும்6 விமான நிலையங்களில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும்.

விமானங்களை பராமரிக்கும் தளங்களை இந்தியாவிலேயே அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய வான்வெளி விமான பாதைகள் தொடர்பாக திருத்தங்கள் கொண்டு வரப்படும். விமான நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செய்யப்படும்.

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். செயற்கைகாள் ஏவுதல், தயாரிப்பு உள்ளிட்டவற்றில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும். விண்வெளி ஆய்வு மற்றும் பயணம் ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளலாம். இஸ்ரோ அமைப்பின் உள்கட்டமைப்பு வசதிகளைதனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

8 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். இதன் மூலம் மின்சார விநியோகம் மேம்படுவதுடன் அதன் தரம் உயரும். மின்பகிர்மான நிறுவனங்களுக்கான புதிய வரி விதிப்பு முறைகள் அறிமுகம் செய்யப்படும்.

உணவு பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதரியக்க ஐசோடோப்புகளை தனியார் உருவாக்க அனுமதிக்கப்படும். மருத்துவ துறையில் பயன்படும் கதிரியக்க தனிமங்களை தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்கும்.

தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவே பிரதமர் வகுத்திருக்கும்திட்டத்தின் அடிப்படை . இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கைகளில் சீர்திருத்தம் அவசியம். பிற நாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கைகளில் சீர்திருத்தங்கள் தேவை.நிறைய துறைகளில் விதிமுறைகளில் பங்களிப்புகள் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

ஜிஎஸ்டி போன்ற முக்கியமான சீர்திருத்தங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். வளர்ந்து வரும் புதிய துறைகளை ஊக்கப்படுத்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

முதலீடுகளை ஈர்க்கும்திறனை கொண்டு மாநிலங்கள் தர வரிசைபடுத்தப்படும். தொழில் பூங்கா உருவாக்க 5 லட்சம் ஹெக்டேர் காலியிடம் கையிருப்பில் உள்ளது. நாடு முழுவதும் தொழில் பூங்காக்கள் தரவரிசைப் படுத்தப்படும்.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளை கட்டமைப்பை வலுப்படுத்த திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

நிலக்கரி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க திட்டம். வணீக ரீதியில் நிலக்கரி தோண்டுவதில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படும்.

பற்றாக்குறை இருக்கும் இந்த நேரத்தில் ஒழுங்குபடுத்துதல் அவசியம் அதனுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நிலக்கரி இறக்குமதியை குறைத்து, உள்நாட்டில் உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு பெற நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலக்கரித்துறையை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதால், சீர்திருத்தம் அவசியம். 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை விடப்படும். இந்தியாவில் நிலக்கரி வளம் அபரீதமாக உள்ளது.நிலக்கரியை எரிவாயுவாக மாற்றப்படுவதற்கு மானியம் வழங்கப்படும்.

கனிமம் வெட்டுதல் ,டெண்டர் உள்ளிட்டவை இனி ஒரே நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும்.500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும். அலுமினியம் உற்பத்தி ஊக்குவிக்கும் வகையில் பாக்சைட் மற்றும் நிலக்கரி சுரமம் ஒன்றாக ஏலம் விடப்படும். சுரங்கத்துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

கனிம சுரங்கங்களை பிற நிறுவனங்களுக்கு மாற்ற அனுமதிக்கப்படும். கனிம சுரங்கங்களில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க திட்டம் வகுக்கப்படுகிறது. கனிம பொருட்களை பிரித்து எடுக்க ஒருங்கிணைந்த ஒப்பந்தம் கோரப்படும்.மீத்தேன் வாயு திட்டத்திலும் தனியார் துறைக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவு எட்டும் வகையல் மேக்இன் இந்தியா பயன்படுத்தப்படும். வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும். சில ராணுவ தளவாடங்களை உள்நாட்டில் மட்டும் உற்பத்தி வகையில், அதன் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும்.

பாதுகாப்பு உபகரணங்கள் உள்நாட்டில் கொள்முதல் செய்ய புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும். ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவனங்களாக மாற்றப்படும். ராணுவ தளவாடங்கள் இறக்குமதி மசோதா விரைவில் அறிமுகபடுத்தப்படும். பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் அன்னிய முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

nirmala seetharaman

பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி சுயசார்பு திட்டம் குறித்து 4வது நாளாக விளக்கம் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளில் சில….

  • ஏற்கனவே வருமான வரிக்கணக்கல் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது
  • சிறுகுறு நிறுவனங்களுக்கு கடன் உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன
  • இந்தியாவை தற்சார்பு பொருளாதாரமாக்குவது தான் மிக முக்கியம்
  • இந்தியாவில் பல்வேறு துறைகளுக்கான கொள்கைகள் எளிமைப்படுத்தப்பட உள்ளன
  • அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட வேண்டியது அவசியம்
  • பயனாளிகளுக்கு நேரடியாக மானியத்தை வங்கிக்கணக்கில் செலுத்துவது மிக முக்கியமான சீர்திருத்தம்
  • ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது இந்திய பொருளாதாரத்தின் பாதையை மாற்றிய சீர்திருத்த நடவடிக்கை
  • அடிப்படை கட்டமைப்பு சீரமைப்புகளுக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளன
  • இந்தியாவின் உற்பத்தி துறையில் முதலீடுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன
  • இந்திய உற்பத்தி துறையில் வேலை வாய்ப்புகளும் அதிக உள்ளன
  • உலக அளவில் கடினமான போட்டிகளை எதிர்கொள்ள இந்திய தொழில்துறை தயாராக வேண்டியது முக்கியம்
  • முதலீடுகளுக்கான அனுமதியை அதிவிரைவாக வழங்க அரசு செயலர்கள் மட்டத்திலான குழுக்கள் அமைப்பு
  • ஒவ்வொரு அமைச்சகத்திலும் திட்ட மேம்பாட்டு பிரிவு உருவாக்கப்படும்
  • திட்டங்களை அடையாளம் கண்டு முதலீட்டாளர்கள், மத்திய, மாநில அரசுகளை ஒருங்கிணைக்கும் பணியில் திட்ட மேம்பாட்டு பரிவு ஈடுபடும்
  • முதலீடுகளை ஈர்ப்பதன் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்படும்
  • தொழிற்துறை தகவல் அமைப்பு மூலம் 5 லட்சம் ஹெக்டேரில் 3376 தொழிற் பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன
  • நடப்பு நிதி ஆண்டு முதல் தொழிற்பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும்
  • முதலீடுகளை எளிதாக ஈர்க்கும் வகையில் கொள்கை சீர்திருத்தம்
  • தொழில்துறை உள்கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும்
  • விமானப்போக்குவரத்து துறையில் முதலீடுகளை அதிகரிக்க கொள்கை அளவில் மாற்றம் செய்யப்படும்
  • மின்சாரத்துறையிலும் முதலீடுகளை ஈர்க்க கொள்கை மாற்றங்கள் செய்யப்படும்
  • நிலக்கரி, கனிமம் மற்றும் பாதுகாப்புத்துறையிலும் கொள்கை மாற்றங்கள் கொண்டுவரப்படும்
  • விண்வெளித்துறையில் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்படும்
  • ஒட்டு மொத்தமாக 8 முக்கிய துறைகளிலும் கொள்கை மாற்றங்கள் உருவாக்கப்படும்
  • விமான நிலையங்கள், மின் விநியோகம், அணு சக்தி துறைகளிலும் கொள்கை ரீதியிலான சீர்திருத்தம்
  • நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டிலேயே உற்பத்தியை பெருக்குவதற்கு திட்டம்
  • நிலக்கரித்துறையில் தனியார் துறையின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்
  • கனிமவளத்துறையில் நிலையான விலை நிர்ணயத்திற்கு பதில் வருவாயில் பங்கு வழங்கும் முறை அறிமுகம்
  • நிலக்கரி சுரங்கங்களை இனி யார் வேண்டுமானாலும் ஏலம் எடுத்து பொதுச் சந்தையில் விற்பனை செய்யலாம்
  • உடனடியாக 50 நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளன
  • நிலக்கரி சுரங்க ஏலத்திற்கு நிபந்தனைகள் எதுவும் கிடையாது – அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கு சுரங்கம் ஒதுக்கீடு
  • கனிமவளத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • 2023-2024க்குள் 1 பில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்க இலக்கு
  • நிலக்கரி சுரங்கங்களில் இருந்து ரயில் முனையங்களுக்கு நிலக்கரியை எடுத்துச் செல்லும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ரூ.18ஆயிரம் கோடி
  • கனிமவளங்களை கண்டறிய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்
  • பகுதி அளவு நிலக்கரி சுரங்கங்களும் இனி ஏலம் விடப்படும்
  • 500 கனிம வளச் சுரங்கங்கள் வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும்
  • அலுமினியத்துறையில் போட்டியை ஊக்குவிக்க பாக்சைட் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் சேர்த்து ஏலம் விடப்படுகின்றன
  • கனிமம் குத்தகை வழங்கும் போது முத்திரைத்தாள் கட்டணம் குறைப்பு
  • கனிமவளத்துறை சார்பில் வெவ்வேறு கனிமங்களுக்கான அட்டவணை உருவாக்கப்படும்
  • 50 நிலக்கரி படுகைகளில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு ஏலம் விடப்படும்
  • பாதுகாப்புத்துறை உற்பத்தியில் தற்சார்பை எட்ட மேக் இன் இந்தியா திட்டம்
  • ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் கார்ப்பரேட் மயமாக்கப்படும்
  • ஆயுத உதிரி பாகங்கள் இனி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இறக்குமதி செலவு குறைக்கப்படும்
  • சில ஆயுதங்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும்
  • இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட ஆயுத உதிரி பாகங்கள் சிலவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு
  • பாதுகாப்பு உற்பத்தி துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்வு
  • ரூ.1000 கோடி அளவிற்கு விமான போக்குவரத்து பயணச் செலவை குறைக்க நடவடிக்கை
  • பயணிகள் விமானத்திற்கு இந்திய வான்பரப்பை பயன்படுத்துவதற்கு உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்
  • வான்பரப்பை பயன்படுத்த பயணிகள் விமானத்திற்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் ஆண்டுக்கு ரூ.1000 கோடி மிச்சமாகும்
  • விமான நிலைய பராமரிப்பை தனியார் மயமாக்க மேலும் 6 விமான நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
  • முதல் மற்றும் 2ம் கட்டத்தில் விமான நிலைய பராமரிப்பு தனியார்மயமாக்கலில் ரூ.13ஆயிரம் கோடி கூடுதல் முதலீடாக எதிர்பார்க்கப்படுகிறது
  • இந்தியாவில் விமான பராமரிப்பு கட்டணம் விரைவில் குறையும்
  • விமான என்ஜின் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் என்ஜின் பழுதுபார்க்கும் அமைப்புகளை அமைக்க உள்ளது
  • விமானங்கள் பராமரித்தல் மற்றும் பழுதுபார்க்கும் மையமாக இந்தியா உருவாகும்
  • இந்தியாவில் விமான பழுது மற்றும் பராமரிப்பு துறையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.2000 கோடி புழங்கும்
  • இந்தியாவில் கூடுதலாக 12 விமான நிலையங்களின் பராமரிப்பு ஒப்பந்தத்திற்கு தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
  • சேவையில் குறைபாடு இருந்தால் மின்விநியோக நிறுவனங்களுக்கு இனி அபராதம்
  • யூனியன் பிரதேசங்களில் மின்விநியோகம் தனியார் மயமாக்கப்படும்
  • சமூக கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தனியார் துறைகளை அனுமதிப்பதன் மூலம் ரூ.8100 கோடி நிதி திரட்டப்படும்
  • கல்வி, சுகாதாரம், பொதுபோக்குவரத்து உள்ளிட்ட சமூக கட்டமைப்புகளை மேம்படுபத்த ரூ.8100 கோடி
  • கல்வி, சுகாதாரம், பொதுபோக்குவரத்து உள்ளிட்ட சமூக கட்டமைப்புகள் மேம்பாட்டில் தனியார் துறையை ஊக்குவிக்க ரூ.8100 கோடி
  • விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்
  • உணவுப் பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்க தனியார் பங்களிப்புக்கு அனுமதி
  • இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு கட்டமைப்பை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதி
  • உள்நாட்டிலேயே உற்பத்தியை பெருக்குவதற்கு திட்டங்களை ஊக்கப்படுத்துவதால் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe