
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 434. இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டவர் எண்ணிக்கை 10,108 என அதிகரித்தது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 49 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் 4 பேரும், தூத்துக்குடியில் ஒருவரும் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 11,672 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 359 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 2,599 ஆக உயர்ந்துள்ளது.



