- கடையநல்லூரில் வீடுகளில் பெருநாள் சிறப்பு தொழுகை – இனிதே ரமலான் கொண்டாடிய இஸ்லாமியர்கள்!
- கடையநல்லூரில் வீடுகளில் பெருநாள் சிறப்பு தொழுகை – இனிதே ரமலான் கொண்டாடிய இஸ்லாமியர்கள்!
- ஊரடங்கால் வீடுகளில் ரமலான் தொழுகை – வெறிச்சோடிய மசூதிகள்!
கொரோனா தொற்றை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை ஒட்டி இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று நோன்பு நோற்பது ஆகும். குறிப்பாக இஸ்லாமியர்களின் புனித குர்ஆன் அருளப்பட்ட சிறப்புக்குரிய மாதமான ரமலான் மாதத்தின் 30 நாட்களும் நோன்பு கடைபிடிப்பர். இதனை ஆண்டுதோறும் பின்பற்றி வருகின்றனர். நடப்பாண்டில் கொரோனா தொற்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி இதுவரை திறந்தவெளி ஈத்கா திடல் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெற வேண்டிய ரமலான் சிறப்பு தொழுகை சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு, அவரவர் வீடுகளில் நடத்துமாறு அரசு தலைமை ஹாஜி மற்றும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் அறிவுறுத்தினர்
அதனால் ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகையும், மாலையில் நோன்பு திறக்கும் நிகழ்வு, கஞ்சி காய்ச்சிக் கொடுப்பது அனைத்தும் சமூக விலகல் கடைபிடிக்க வேண்டி தடை செய்யப்பட்டது இதனால் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே கடைபிடித்தனர். அதேபோன்று இன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையை அவரவர் வீடுகளில் மொட்டை மாடிகளில் தனித்தனியே சமூக இடைவெளியை பின்பற்றி தொழுகை நடத்தினார் இதனால் பள்ளிவாசல்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது தொழுகையை முடித்தவுடன் இந்த ஆண்டு ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவுவது கை கொடுப்பது போன்றவற்றை தவிர்த்துக் கொண்டனர் .
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் சென்னையிலே சனிக்கிழமை இரவு பிறை பார்த்தால் நேற்றைய தினம் ஞாயிறு காலை 630 மணி அளவில் பெருநாள் சிறப்பு தொழுகையை அவரவர் வீடுகளில் மொட்டை மாடிகளில் தனித்தனியே தொழுகை நடத்தினார் .
முன்னதாக தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், ரஹ்மானியாபுரம், மக்காநகர் ,மதினா நகர், தவ்ஹீத் நகர், இக்பால் நகர், மாவடிக்கால், திரிகூடபுரம், புளியங்குடி ,வாசுதேவநல்லூர் ,சங்கரன்கோவில் ,தென்காசி , அச்சன்புதூர், வடகரை, செங்கோட்டை, வாவா நகரம், வீரணம் ,மாலிக்நகர், பொட்டல்புதூர் போன்ற பகுதிகளில்உள்ள ஏழை எளியவர்களை கணக்கிட்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று ஃபித்ரா என்னும் அரிசி 5 கிலோ வீதம் சுமார் 10,000 நபர்களுக்கு வழங்கினார் .