
மதுரை: மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் சாலையோர மரக்கிளைகள் முறிந்து பல மணி நேரம் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.
மதுரை, வாடிப்பட்டி, பரவை, கோச்சடை, திருப்பரங்குன்றம், விளாச்சேரி, திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர், மேலூர், ஒத்தக்கடை, பூவந்தி, வரிச்சூர் , கருப்பாயூரணி, ஓடைப்பட்டி, காளிகாப்பான் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மதுரை கோமதிபுரம் குருநாதன் தெருவில் மரக்கிளைகள் முறிந்து பல மணி நேரம் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. மேலும் அப்பகுதி குடியிருப்புகளை சுற்றி மழைநீர் குளம் போல சூழ்ந்தன.
சில காலிமனைகளில் செடி, கொடி அடர்ந்திருப்பதால், கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் பகுதிகளில் இரவு நேரத்தில் பாம்புகள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியதாம்.
கருப்பாயூரணி பகுதிகளில் சாலையோரமாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதாம். மதுரை மாநகராட்சி நிர்வாகமானது, மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் பகுதிகளில் காலியாகவுள்ள பிளாட்டுகளில் உள்ள மரம், செடி கொடிகளை, வீட்டு உரிமையாளர்கள் அகற்ற நடவடிக்கு எடுக்க வேண்டுமேன, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை