
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது.
- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698 ஆக உயர்வு.
- சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,479 பேருக்கு கொரோனா
- சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 28,924 ஆக அதிகரிப்பு.
- தமிழகத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு
- உயிரிழந்தோர் எண்ணிக்கை 367 ஆக உயர்வு.
- தமிழகத்தில் ஒரே நாளில் 1342 பேர் டிஸ்சார்ஜ்
இதுவரை 22,047 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஜூன்12 இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698 ஆகவும், உயிரிழ்ப்பு எண்ணிக்கை 367 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று மேலும் 1,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 49 பேர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதை அடுத்து மொத்த பாதிப்பு 40,698 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் 15 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும், திருவள்ளூரில் ஒருவரும் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 10 பேர் அரசு மருத்துவமனையிலும், 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதை அடுத்து இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 22,047 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இதுவரை இல்லாத அளவாக இன்று 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மே 31ஆம் தேதிக்குப் பின்னர், தினமும் சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இன்றும் 1,479 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் 128 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 92 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26 பேருக்கும் கொரோனா தொற்று இன்று உறுதியாகியுள்ளது.