தமிழ்நாடு சமூக நீதிக்காக போராடும் மாநிலம்: ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் பேச்சு!

சற்றுமுன்
IMG 20170701 213717 - 2026

தமிழ்நாடு எப்போதும் சமூக நீதிக்காக போராடும் மாநிலம் என ஜனாதிபதி வேட்பாளர்
மீராகுமார் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் காங். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் மீராகுமார் தனக்கு
ஆதரவு கேட்டு சென்னை வந்தார். அப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து
ஆதரவு கோரினார்.

அதனைதொடர்ந்து மீராகுமார் செய்தியார்களிடம் கூறியதாவது:- சமூக நீதி மற்றும்
ஜனநாயக் மரபுகளை காப்பதில் மாபெரும் சக்தியாக விளங்குபவர் திமுக தலைவர்
கருணாநிதி. கடந்த சில நாட்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில
நிகழ்வுகள் நடந்துள்ளன. மதசார்பின்மை,சமூக நீதிக்கு மு.க.ஸ்டாலின் குரல்
கொடுத்து வருகிறார்.

ஊடக சுதந்திரம்,பேச்சுரிமைக்காக போராடி வருகிறேன். ஜனநாயகத்தின் மீது மதிப்பை
கொண்டது தமிழகம். தமிழ்நாடு எப்போதும் சமூக நீதிக்காக போராடும் மாநிலம்.
ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ,எம்.பிக்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க
வேண்டும் என்றார்.

பின்னர் திமுக, காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்
எம்.எல்.ஏக்களிடம் மீராகுமார் ஆதரவு கோரினார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

மீராகுமாருடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் ஸ்டாலினுடன்
சந்தித்தார். இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் எம்.பி
டி.கே ரங்கராஜனும் சந்தித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.