
தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 3,645 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 74,622 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 1,956 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 49,690ஆக உயர்வு கண்டுள்ளது. தமிழகத்தில் ஒரேநாளில் 46 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 1,345 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். இதை அடுத்து, இதுவரை 41,357 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
சென்னையில் புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது!
இன்று 6 மாவட்டங்களில் 100ஐ கடந்த பாதிப்பு!
சென்னை – 1,956
செங்கல்பட்டு – 232
மதுரை – 194
திருவள்ளூர் – 177
வேலூர் – 149
சேலம் – 111
காஞ்சிபுரம் – 90
ராமநாதபுரம் – 72
திருவண்ண்ணாமலை – 70
கள்ளக்குறிச்சி – 58
ராணிப்பேட்டை – 53
கோவை – 43
தேனி – 40
தூத்துக்குடி – 37
விருதுநகர் – 33

