தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,747 பேருக்கு தொற்று உறுதி!

Published:

corona virus
corona virus
  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்வு.
  • சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,747 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 70,017 அதிகரிப்பு.
  • தமிழகத்தில் மேலும் 61 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 1,571 ஆக உயர்வு.
  • தமிழகத்தில் ஒரே நாளில் 3,793 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 66,571 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1747 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.இதை அடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்தது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,017 ஆக உயர்ந்துள்ளது. 

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 1571 ஆக உயர்ந்துள்ளது. 

அதே நேரம், இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 3793 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதை அடுத்து,  தமிழகத்தில் மொத்தம் 66,571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 213 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில்  182 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 175 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. அடுத்து மதுரை மாவட்டத்தில் மேலும் 245 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பட்டியல்:

districtwise details corona july
districtwise details corona july

Related articles

Recent articles

spot_img