தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் அதிகாரிகள், போலீஸார், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 2 அமைச்சர்கள் 8 எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது! இந்நிலையில் இறு செல்லூர் ராஜூவுக்கும் தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
இதை அடுத்து, செல்லூர் ராஜூ சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவரது உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் கூறப் படுகிறது.