காய்ச்சலால் அவதி; மதுரையில் ஒருவர் உயிரிழப்பு!

கிரைம் நியூஸ் சற்றுமுன் மதுரை
died
died

மதுரையில் காய்ச்சலால் அவதிப்பட்ட நபர் ஒருவர், படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்தார்.

மதுரை புது எல்லீஸ் நகரில் வீட்டில் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தவர் இறந்தார். மதுரை புது எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் 58 . இவருக்கு கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் படுக்கையிலே, இறந்து கிடந்தார்.

இது குறித்து அவருடைய உறவினர் கௌரி அளித்த புகாரின் பேரில், எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வயிற்று வலியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் வயிற்றுவலியால் இளைஞர் ஒருவர் வீட்டிலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து , போலீஸார் கூறியபோது…

மதுரை செல்லூர் சந்தனமாரியம்மன் கோயில் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அறிவுச் செல்வம் 30 . இவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந் நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டராம். இது குறித்து, செல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.