December 5, 2025, 9:23 PM
26.6 C
Chennai

“பூக்காரி காமாட்சி” (நம்பினார் கெடுவதில்லை. இது நான்குமறை தீர்ப்பு.)

10649504 925523734144259 6912074781457211637 n 1 - 2025

“பூக்காரி காமாட்சி” (நம்பினார் கெடுவதில்லை. இது நான்குமறை தீர்ப்பு.) (“அப்பா,
நீ இருந்தா இப்படி என்னை வெறுங் கூடையுடன் அனுப்புவாயா?” என்று
புலம்பினாள்.கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளுக்கு,
தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு சம்பரத்தைப் பூவை யாரோ வீசி
எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது”).

கட்டுரை-கணேச சர்மா புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
தட்டச்சு-வரகூரான் நாராயணன் 06-02-2012ல் குருப்களில் போஸ்டானது.

காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள். அவள் மஹா
பெரியவாளை, ‘அப்பா’ என்றுதான் அழைப்பாள். தினமும் ஒரு கூடை பூவினால் பெரியவாளை
அர்ச்சிப்பாள். பெரியவா, ஏன் இப்படி பூவை வீணாக்கறே? இதை வித்தா உனக்குக் காசு
கிடைக்குமே!” என்பார். காசு பெரிசா சாமி! உன் தலையில் அர்ச்சித்தால் அதற்கு
மேலேயே எல்லாம் கிடைக்கும்” என்பாள் பூக்காரி.

மடத்தில் ஒரு நியதி உண்டு. பெரியவா படுத்துக்கப் போய்விட்டால் யாரும்
எழுப்பக்கூடாது. ஆனால், இதற்கு பூக்காரி காமாட்சி மட்டும் விதிவிலக்கு. எத்தனை
நேரமானாலும் வரலாம். ஏனெனில், பெரியவாளே அவளிடம், நீ உன் வியாபாரத்தை
முடித்துக்கொண்ட பிறகுதான் என்னிடம் வரணும். பாதியில் விட்டு விட்டு
வரக்கூடாது!” என்று கட்டளை இட்டிருந்தார். அவளது பிழைப்பை தனக்காக விடுவதற்கு
அந்தக் கருணாமூர்த்தி சம்மதிப்பாரா?

ஒரு நாள் பெரியவா, நாகராஜன் என்பவரை ஒன்பது மணி செய்தியைச் சொல்லச் சொல்லி,
கேட்டுக் கொண்டிருந்தார். வேதாந்த தத்துவங்கள் ஒருபுறம் இருந்தாலும், உலக
நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டார். அந்தச் செய்திகளை அலசி ஆராய்ந்த
பிறகு படுக்கப்போக நெடு நாழிகை ஆகிவிடும்.

அன்று, புதுக்கோட்டையிலிருந்து ‘ஜானா’ என்ற ஒரு பெண் பெரியவாளுக்கு
வெல்வெட்டில் பாதுகை ஒன்றை செய்து கொண்டு வந்திருந்தாள். அதைக் காலை முதல்
பெரியவா கழற்றவேயில்லை. படுக்கைக்குப்போகுமுன் கொட்டகை சென்று, தேக சுத்தி
பண்ணிக் கொண்டு வரச்சென்றார். அப்போது செய்தி சொல்லும் நாகராஜன், இன்று
பெரியவா பாதுகையைக் கழட்டினதும் நான்தான் எடுத்துக்கொள்வேன். என்னிடம்
பெரியவர் பாதுகையே இல்லை!” என்று மகாபெரியவர் பாதுகையைக் கழட்டுவதற்குக்
காத்திருந்தார்.

பெரியவா பாதுகையைக் கழட்டாமலேயே உட்கார்ந்திருந்தார். பூக்காரியும் நானும்
அங்கு போய் நமஸ்காரம் பண்ணினோம். பாதுகையைக் கழற்றி பூக்காரியிடம் கொடுத்து,
இது உனக்குத்தான், எடுத்துக்கோ!” என்றார் பெரியவர்.

நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கிறது!” என்று நாகராஜன் குறையோடு
திரும்பினார்.

அப்படிப்பட்ட அன்புக்கு, அந்த ஏழைப் பூக்காரி பாத்திரமாயிருந்தாள். எத்தனையோ
பேர் அவளிடம் லட்ச ரூபா தரோம், இந்தப் பாதுகையைக் கொடு” என்றனர். அவள்
அசையவேயில்லை.

பெரியவா அவளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச்
செய்தார்.அவள் வீட்டுத் திருமணங்களுக்கு வண்டி, வண்டியாக கல்யாண சாமான்கள்
அனுப்பினார்.

பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால் அர்ச்சிப்பதை காமாட்சி
விடவில்லை. ஆனால், பெரியவா இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல்,
ஏதாவது பழம் போன்றவற்றை அதில் போட்டுத்தான் அனுப்புவார். அவர் மறைவுக்குப்
பின் வெறுங்கூடையைப் பார்க்கவே அவளுக்கு வருத்தமாக இருந்தது.

அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங் கூடையுடன் அனுப்புவாயா?” என்று
புலம்பினாள்.கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளுக்கு,
தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு சம்பரத்தைப் பூவை யாரோ வீசி
எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது. சமாதிக்கு நேரே முறையிட்டால்கூட
பதில் சொல்லக்கூடிய சாமியை, ‘போயிடுத்து,போயிடுத்து’னு யாரும் சொல்லக்கூடாது
என்று அவள் எல்லோரிடமும் சொல்லுவாள்.

இதுபோல் பல நிகழ்வுகள் இன்னமும் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
பிரத்யட்சமாக அவர் அருளைத் தந்து கொண்டுதான் வருகிறார்.

நம்பினார் கெடுவதில்லை. இது நான்குமறை தீர்ப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories