“HORSE ISLAND & ASH ISLAND”

Published:

10406745 859208287442471 99817598003990377 n 5 - 2026

“HORSE ISLAND & ASH ISLAND”

(கபிலாரண்யம் “கலிஃபோர்னியா” என்று திரிந்த கதை)

பெரியவாளின் அற்புத விளக்கம்

கட்டுரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கபில முனிவர் இருந்த இடம் அது. இவர் தவம் பண்ணிக்கொண்டிருக்கையில் இக்ஷ்வாகு
வம்சத்து சகரர் என்னும் அரசர்அச்வமேத யாகம் செய்தார். இந்த யாகத்தைச் செய்ய
வேண்டுமென்றால்,முதலில் ஒரு குதிரையை எல்லா தேசங்களுக்கும் அனுப்புவார்கள்.

அதை எந்த அரசனாவது பிடித்துக் கட்டிப் போட்டால் அவனுடன்யுத்தம் செய்து வென்று,
பிறகு எல்லோரும் பாராட்ட இந்த யாகம்செய்யப்படும். பொதுவாக எல்லா அரசர்களும்
வம்பு செய்யாமல்அந்தக் குதிரைக்குரிய கப்பம் செலுத்திவிட்டு அரசனைச்
சக்ரவர்த்தி என்று ஒப்புக்கொண்டு விடுவார்கள்..

ஆனால் இந்த யாகத்துக்கு முதலில் இந்திரன்தான் தடங்கல் செய்வான். ஏனெனில் நூறு
அஸ்வமேத யாகம் செய்து விட்டால் இந்திர பதவி ஒருவனுக்குக் கிடைத்துவிடும். தனது
பதவி பறி போகாமல் இருக்கும்படிப்பார்த்துக் கொள்வது இந்திரன் வழக்கம். எனவே
அவன் சகரர் விட்ட குதிரையைப் பிடித்துக் கொண்டு போய் பாதாள உலகில் கபிலர் தவம்
செய்யும் ஆஸ்ரமத்தில் கொண்டு யாருக்கும் தெரியாமல் கட்டிவிட்டான்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

அதைத் தேடிக்கொண்டு வர சகரன் தன் நூறு பிள்ளைகளையும் அனுப்பவே, அவர்களும்
எப்படியோ கபிலாச்ரமம் வந்து சேர்ந்து, கபிலர்தான் பிடித்துக் கட்டிவிட்டதாக
நினைத்து அவரிடம் சண்டைக்குப் போனார்கள். அதனால் கோபங்கொண்ட கபிலர் ஒரு முறை
முறைத்தார். அவ்வளவுதான்! அங்கு வந்த நூறு பேரும் சாம்பலாகிப் போனார்கள். இது
சகரனுக்குத் தெரிந்து அவன் சென்று கபிலரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அசுவமேத
யாகம் செய்து முடித்தானென்பது ராமாயண முன்கதையில் தெரிகிறது.

அந்தக் கபிலாரண்யம்தான் “கலிஃபோர்னியா” என்று திரிந்து விட்டது.

சாட்சியாக அந்தக் குதிரை கட்டின இடம் இன்றும் HORSE ISLAND என்று
அழைக்கப்படுகிறது. நூறுபேரும் சாம்பலான இடம் ASH ISLAND எனப்படுகிறது.

இப்படியாகப் பெயர் காரணங்ளை அலசி ஆராய்ந்து பெரியவா சொன்னால் திகைப்பு அடங்கவே
அடங்காது.

Related articles

Recent articles

spot_img