“இங்கிலாண்டில்கூட விடாமல் அமாவாஸைத் தர்ப்பணம்
பண்ணினேன்”-ஒரு அந்தண அடியார் பெரியவாளிடம்.”
(பெரியவாளின் அதிரடி நகைச்சுவை-இரண்டு)
ஒரு சிறு பதிவு)
கட்டுரையாளர்;ரா.கணபதி.
(மஹா பெரியவாள் விருந்து)
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நகைச்சுவை-1
பிராமணர்கள் கடல் கடந்து போவது, ஆசாரக்
காவலரான ஆசார்ய பெருமானுக்கு உகந்ததல்ல
என்று அறிந்த ஓர் அந்தண அடியார்,
சீமை சென்று திரும்பியபின், அங்கும் நமது
ஆசாரங்களைத் தரம் வழுவாது பின் பற்றியதைப்
பெரியவாளிடம் தெரிவித்தால் அதை ஏற்றுக் கொள்வார்
என்று எண்ணினார்.
“இங்கிலாண்டில்கூட விடாமல் அமாவாஸைத் தர்ப்பணம்
பண்ணினேன்” என்றார்.
“அதாவது நீ போனது போதாது என்று உன் பித்ருக்களையும்
மேல் நாட்டுக்கு வரவழைத்து விட்டாயாக்கும்!” என்று
பெரியவாள் சிரித்துக்கொண்டே ஒரு வெட்டு வெட்டினார்.
நகைச்சுவை-2
பெரியவாளின் முன் உளறிக் கொட்டிக் கிளறி மூடிய
ஓர் உபந்நியாஸகர்,
“ஒரே அபத்தமாகச் சொன்னேன். விருத்தியாவதற்குப்
பெரியவாள்தான் அனுக்கிரஹிக்கணும்” என்றார்.
“அபத்தம் விருத்தியாவதற்கு நான் வேறே
அநுக்கிரஹிக்கணுமா?” என்றார் குரும்பர்.



