கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை
நடைபெற்றது.
தக்ஷிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் 1100
ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் நரசிம்மர் அவதரித்த சுவாதி
நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடைபெறும். ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை
முன்னிட்டு மாலை 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூக்த ஹோமம்,
மகாலட்சுமி ஹோமம் தொடர்ந்து 12 வகையான பொருட்களால் அபிசேகங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான
பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், நரசிம்ம சுவாமி கைங்கர்ய
சபையினரும் செய்திருந்தனர்.
கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோயிலில் சுவாதி பூஜை
Popular Categories



