“நீ என்ன பீட்டரா? பாலகிருஷ்ணனா?” பெரியவா
(பையன் நிலை தடுமாறிப் போனான். ‘அந்தப் பெயர்’ பெரியவாளுக்கு எப்படி
தெரிந்தது? ஏதாவது ரிக்கார்டைப் பார்த்திருப்பாரோ? ஏkதாவது இல்லை. எல்லா
ரிக்கார்டும் பெரியவாளுக்குத் தெரியும்!.)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-167
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
பன்னிரண்டு வயது பாலகிருஷ்ணனுக்கு நல்ல சகவாசம் இல்லை.யார்,யாருடனோ
பழகுகிறான். வேறு மதஸ்தர் வழிபாட்டுத் தலங்களில் அவர்களுடன் சேர்ந்து பிரேயர்
செய்கிறான்.சந்த்யாவந்தனம்செய்வதில்லை.விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதில்லை.
இப்படி ஒவ்வொரு முறை வரும்போதும் சொல்லிக் கண் கலங்கினார் அன்பர்.
சில நாள்கள் சென்றதும் பதறிக் கொண்டு வந்தார்கள் பெற்றோர்,
“பாலகிருஷ்ணனைக் காணவில்லை..”
பெரியவாள் சொன்னார்கள்;
“அவன் வெகுதூரம் – வடக்கே – போயிருக்க மாட்டான். பொறுமையாக அவன்
இருக்குமிடத்தை யுக்திபூர்வமாகக்
கண்டு பிடியுங்கள்..”
இரண்டு மாதம் கழித்து திரும்ப வந்தார்கள் பெற்றோர். தாயார் கண்களில் வெள்ளம்.
“வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அநாதை இல்லத்தில் தங்கியிருந்து
பள்ளிக்கூடம் போய் வருகிறானாம்
சில நிமிடங்களுக்குப் பின் பெரியவாள் கூறினார்கள்.
“அவன் தங்கியிருக்கும் ஹாஸ்டல் வாசலில் நின்று கொள்ளுங்கள். அவன்
பள்ளிக்கூடத்துக்குப் போவதற்காக வெளியே வரும்போது சங்கரா…என்று மூன்று முறை
குரல் கொடுங்கள்….”
அவ்வாறே செய்தார்கள்.
என்ன ஆச்சர்யம்! ஈசுவரன் பெயரைக் கேட்டதும் திரும்பிப்பார்த்தான்.
அப்பா – அம்மா !
ஓடி வந்து கட்டிக்கொண்டு அழுதான்.
வீட்டுக்குத் திரும்பினான்.
“நீ என்ன பீட்டரா? பாலகிருஷ்ணனா?” பெரியவா
பையன் நிலை தடுமாறிப் போனான். ‘அந்தப் பெயர்’ பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?
ஏதாவது ரிக்கார்டைப் பார்த்திருப்பாரோ? ஏதாவது இல்லை. எல்லா ரிக்கார்டும்
பெரியவாளுக்குத் தெரியும்!.





