தமிழகத்தில் இன்று… 6,986 பேருக்கு கொரோனா உறுதி; 85 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம்
corona-virus-4
corona-virus-4

தமிழகத்தில் இன்று 6986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம், இன்று ஒரே நாளில் 5471 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் .

தமிழகத்தில் இன்று 6986 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,13,723ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம், தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,56,526ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 85 பேர் உயிரிழந்ததை அடுத்து கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,494ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து  சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,695ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வருகிறது. சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 5831 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டது 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் 

covid-case-jul26b
covid-case-jul26b

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.