பணி முடிந்து இரவு வீட்டிற்கு வந்த மகன்.. வேறு நபருடன் தாய்.. தந்தையிடம் சொல்ல.. நடந்த விபரீதம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
love

நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். இவருக்கு லீலாவதி என்ற பெண்ணுடன் திருமணமாகி தற்போது 20 வயதில் அஜித் என்ற மகனும் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ராமதாஸுக்கும், லீலாவதிக்கும் சண்டை ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகன் அஜித் தனது தந்தையோடு வசித்து வந்தாலும் அடிக்கடி தாயை சென்று சந்தித்து வந்துள்ளார்.

அஜித் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நேற்று நைட் ஷிஃப்ட் பணி முடிந்து அதிகாலையில் வீடு திரும்பிய அஜித் தனது அம்மாவின் வீட்டில் லைட் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அங்கு சென்றுள்ளார்.

murder-2-1

அங்கு தன் தாய் வேறு ஒரு நபரோடு தனிமையில் இருப்பதை கண்ட அஜித் அதிர்ச்சியடைந்துள்ளார். அதை தாங்க முடியாமல் தனது தந்தையிடமும் சென்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் மனைவியின் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு போலீஸில் சரண் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.