அதிமுக.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ்
பெறுவதாக தெரிவித்துள்ளதால் சட்டசபையை உடனடியாக கூட்டி எடப்பாடி பழனிசாமி
அரசின் மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என திமுக மற்றும்
அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஏற்கனவே கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு
அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி மனு அளிப்பதற்காக
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏ.,க்கள் இன்று
(செப்.,10) மாலை கவர்னரை சந்திக்க உள்ளனர்.
இந்நிலையில் சபாநாயகர் தனபாலையும் நாளை (செப்.,11) சந்திக்க திமுக
எம்.எல்.ஏ.,க்கள் முடிவு செய்துள்ளனர். சட்டசபையை உடனடியாக கூட்டி நம்பிக்கை
ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு சபாநாயகர் தனபாலிடமும் மனு அளிக்க திமுக.,
வினர் திட்டமிட்டுள்ளனர்



