ஏப்ரல் 21, 2021, 7:42 மணி புதன்கிழமை
More

  அமைச்சர் முன்பே… ஆட்சியர் அலுவலக டபேதார் மயங்கி விழுந்து மரணம்‌!

  அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது அரங்கேறிய சோக சம்பவத்தால் அமைச்சர் உள்ளிட்டோர் பெரும் அதிர்ச்சி

  madurai-taphethar

  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த டபேதார் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அதுவும் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது அரங்கேறிய சோக சம்பவத்தால் அமைச்சர் உள்ளிட்டோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

  மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலருக்கு டபேதார் ஆக பணியாற்றி வருகிறார்!

  இந்த நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் பங்கேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் அங்கு பணியில் இருந்த டபேதார் திடீரென மயங்கி விழுந்துள்ளார்!

  உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு அரசு வாகனம் முலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்!

  மேலும் நெஞ்சு வலியின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது! பணியில் இருந்த டபேதார் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »