
திருப்பரங்குன்றம் போக்குவரத்து சார்பு ஆய்வாளராக பணியாற்றிய மலர்சாமி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது போலீஸாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் பிரிவில் சார்பு ஆய்வாளராக பணியாற்றியவர் மலர்சாமி. இவருக்கு கடந்த 25ஆம் தேதி கொரோனா தொற்று பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று சிறப்பு சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்றுவந்த மலர் இன்று காலை (07.09.20) சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். மரணம் அடைந்த மலர்சாமிக்கு வசந்தி என்ற மனைவியும் அருண்குமார், விக்னேஷ் குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
கொரோனா தொற்றால் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் உயிரிழந்தது போலீஸாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை