பெயர் சுடலை; த/பெ: கட்டுமரம்! இணையத்தில் கலகலக்கும் திமுக., உறுப்பினர் அட்டைகள்!

dmk-card2-1
dmk-card2-1

திமுக.,வில் ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், விவரமறியா வாரிசு ஆகிய பெயர்களில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதை விட ஒரு படி மேலாகச் சென்று, சுடலை, தந்தை பெயர் கட்டுமரம் கொளத்தூர் தொகுதி என்று வழங்கப் பட்டிருக்கும் உறுப்பினர் அட்டைதான் படு பயங்கர கிண்டல்களுடன் இணையத்தில் உலா வருகிறது. திமுக.வின் இந்த கூத்துக்களை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

வரும் 2021ல் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக திமுக., எந்த ஒரு அரசியல் துருப்புச் சீட்டையும் பயன்படுத்த மும்முரமாக வேலை செய்து வருகிறது. தேர்தலை முன்னிட்டு உறுப்பினர்களைச் சேர்க்க திமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடத்துவதாக அறிவித்தது.
அதன்படி திமுக., ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்தி வருகிறது. இதற்காக கூகுள் ஆட்ஸ் மூலம் பல்வேறு இணையதளங்கள் வாயிலாகவும், இன்னும் அச்சு ஊடகங்கள் மூலமும் விளம்பரங்களை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திமுக., வழங்கியுள்ள அடையாள அட்டைகள் இணையத்தில் உலா வருகின்றன. திமுகவில் சேர்ந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில், அவர் சென்னை எழும்பூர் தொகுதியைச் சேர்ந்தவர் எனவும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dmk-card
dmk-card

மற்றொரு அடையாள அட்டையில் ‘விவரமறியா வாரிசு’ தந்தை பெயர் மலிவு அரசியல் மன்னர் என்று குறிப்பிட்டு, உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வரும் அதிமுக., துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பெயருக்கும் கார்டு வழங்கப் பட்டுள்ளது.

பொய்களால் நிரம்பியதே திமுக., என்றும் 420ஐ வாழவைக்க ரூ.370 கோடி வாரி இறைத்திருக்கிறது எனவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் சமூக ஊடக கருத்தாளர்கள், இப்போது விதவிதமாக உறுப்பினர் அட்டைகளை தயாரித்து இணையத்தில் உலவ விடுகின்றனர்.

பெயர் சுடலை என்றும், தந்தை பெயர் கட்டுமரம் என்றும், கொளத்தூர் தொகுதி என்றும் குறிப்பிட்டு வலம் வரும் உறுப்பினர் அட்டை அதில் சற்று தூக்கல் ரகம். இந்த அடையாள அட்டைகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், எந்த பெயரிலும், முகவரியிலும் விண்ணப்பித்தாலும் திமுகவில் உறுப்பினராகிவிடலாம் என கேலி செய்து வருகின்றனர்.

dmk-card-3
dmk-card-3

முன்னர் பாஜக., இது போல் இணையவழி உறுப்பினர் சேர்க்கையை நடத்தியது. ஒரு குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு அழைத்தால் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன், தொகுதியைக் குறிப்பிட்டு மெசேஜ் வரும். அதை அந்த அந்தப் பகுதி பொறுப்பாளர்கள் சரி பார்த்து, தகவலை அனுப்பி வைப்பர். அதன் பின்னரே உறுப்பினர் அட்டை தயாராகி வரும். இந்த நடைமுறையிலேயே, சமூக விரோதிகள், ரவுடிகள் கட்சியில் சேர்ந்துவிட்டிருக்கிறார்களே என்று கேள்வி கேட்ட போது, தமிழக மாநில தலைவர் முருகன், ஆன்லைனில் சேர்க்கை அதிகம் நடைபெற்றது…. என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

palanisamy-card
palanisamy-card எடப்பாடி பழனிசாமி பெய்ரில் அட்டை

திமுக.,வில் ஏற்கெனவே அதன் உறுப்பினர்கள் சிலர் அடிதடி, ரகளை, ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து என அவ்வப்போது மாட்டிக்கொண்டு, சமூகத் தளங்களில் அவதிப் படுவார்கள். இப்போது எந்த வித விசாரணையும் இன்றி இப்படி உறுப்பினர் கார்டுகள் கொடுப்பது அக்கட்சியை எங்கு கொண்டு போய் விடுமோ என்று பதைபதைக்கிறார்கள் பழைய திமுக.,வினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories