December 6, 2025, 3:32 PM
29.4 C
Chennai

எந்த தடை வந்தாலும் வேல் யாத்திரை நிச்சயமாக நடைபெறும்!

bjp-murugan-interview-in-madurai
bjp-murugan-interview-in-madurai file pic

மனுஸ்ருமி என்ற ஒன்று தற்போது இல்லவே இல்லை. அது ஒரு கற்பனை. அம்பேத்கார் இயற்றிய சட்டத்தால் மட்டுமே நாடு இயங்கி கொண்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றது என பாஜக மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மதுரை உத்தங்குடி சாலையில் உள்ள தாமரைத் திடலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக பாஜக மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது…

பாஜக சார்பில் ஆளுநருக்கு எங்கள் நன்றி. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பலன் தரும் வகையில் 7.5 சதவீத இடஓதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாக நாங்கள் வலியுறுத்தி இருந்தோம்.

மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தது போல மாநிலத்திற்கேற்ப இடஒதுக்கீடு ஏற்கனவே செய்திருந்தது போல தமிழ்நாடும் செய்திருப்பது வரவேற்கதக்கது.

தேவர் நினைவிடம் என்பது கோவில் சித்தர் பீடம் போன்றது. கோவிலில் என்ன நெறிமுறை வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமோ அதை பின்பற்ற வேண்டும். ஆனால் ஸ்டாலின் தனக்கு கொடுக்கப்பட்ட திருநீறை கீழே ஏறிந்துள்ளார். ஒவ்வொரு முறையும் இந்துக்களையும், இந்து தெய்வங்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார்.

எதற்காக ஸ்டாலின் ஒரு போலி வேஷம் போட வேண்டும். ஓட்டுக்காக எதற்காக போய் நாடகம் நடத்த வேண்டும்.ஆனால் மக்கள் தெளிவாக உள்ளார்கள். ஓட்டுக்காக ஏமாற்றும் வேலையை செய்யக்கூடாது. தேவர் நினைவிடத்தில் ஸ்டாலின் செய்த செயல் மக்கள் மனதை புண்படுத்தி உள்ளது. தமிழக மக்களிடம் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இது வழக்கமாக போய்விட்டது.

இந்திய தாய்மார்களை பெண்களை இழிவாக பேசுபவர்களுக்கு ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார். என்ன சமூக நீதி? பெண்கள், தலித் மக்களை அவதூறாக பேசுபவர்களுக்கு ஸ்டாலின் கேடயமாக உள்ளார். அவர் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் தலித் மற்றும் பெண்களுக்கு எதிராக பேசினால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்றுகிறார்.

இது தான் ஸ்டாலின் போலி சமூக நீதி. இதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர். ஸ்டாலினுக்கு தக்க பதிலை மக்கள் கொடுப்பார்கள்.

எதற்காக வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும். மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். தமிழ்க் கடவுள் முருகனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ்க் கடவுள் முருகனை இழிவு படுத்திய கருப்பர் கூட்டம் பின்னால் திமுக இருந்தது என எல்லோரும் சொல்கிறார்கள். அவர்களுக்கு சட்ட உதவி செய்தது திமுக.

வரலட்சுமி விரதம் பெண்கள் நோன்பிருக்கும் நேரத்தில் இந்த சர்ச்சையை பேசுகின்றனர். அவர்களின் முகத்திரையை கிழிக்கவே வேல் யாத்திரை. இந்தியாவில் மத்திய அரசின் அதிக திட்டங்கள் தமிழகத்தில் தான் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

மனுஸ்ருமி என்ற ஒன்று இப்போது இல்லவே இல்லை. அது ஒரு கற்னை.அம்பேத்கார் இயற்றிய சட்டத்தால் மட்டுமே நாடு இயங்கி கொண்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றது. நடைமுறையில் இல்லாத மனுஸ்ருமியை எப்படி தடை செய்ய முடியும்.

எதிக்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய பயம் உள்து. இளைஞர்கள் தாய்மார்கள் பெண்கள் மத்தியில் பாஜக வளர்ந்துள்ளது. ஸ்டாலினின் முதல்வர் கனவு தகர்ந்து விடும் என்பதால் அச்சப் படுகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு பயம் வந்துள்ளது. பாஜக மூலை மூடுக்கெல்லாம் வளர்ந்து கொண்டுள்ளது. யாத்திரை நடந்தால் பிஜேபி பக்கம் மக்கள் வந்துவிடுவார்கள் என்ற பயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளனர். எந்த தடை வந்தாலும் வேல் யாத்திரை நிச்சயமாக நடைபெறும்.

பாஜக தலைமையிலான மூன்றாவது அணி உருவாகுமா என்பது குறித்த கேள்விக்கு,தேர்தல் வரட்டும் அப்போது பேசலாம் என கூறினார்.

மதுரை உத்தங்குடி தாமரை திடலில் நடைபெறும் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories