மதுரை : மதுரையில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவுக்கு, சர்வதேச தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.
சுவாமி யோககுரு, மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் கண்காணிப்பாளர் சோலைமலை, அடையாறு டாக்டர் சீனிவாசன், தாரகை இதழின் ஆசிரியர் டாக்டர் ஜி. ஜெயபாலன் ஆகியோர் டாக்டர் பட்டங்களை, தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை தொழிலதிபரும், சென்னை தாய் மரம் அறக்கட்டளை நிறுவனருமான சண்முகமணி உள்ளிட்டோருக்கு வழங்கினர்.